செவ்வாய், 29 அக்டோபர், 2013

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க


மழைக்காலத்தில் ஆரோக்கியம் மிக அவசியம்


பருவகாலம் மாறுவது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால், உடலில் இருமல், சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை வந்துவிடும். ஆகவே வரும் முன் காப்பதே சிறந்தது என்னும் பழமொழிக்கேற்ப நோய்கள் வருவதற்கு முன் எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அப்படி எதுவும் வராமல் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில டிப்ஸ்கள் இருக்கிறது.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க


1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்: கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம்.

ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.

2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்: மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும்.

எனவே தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.

3. சுகாதாரம் தேவை: மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும்.

ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலச வேண்டும்.

மேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்: குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது.

மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்

கிட்னியில் கற்கள்

கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள். . .

 

 ‘அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை’.
பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.
இது உண்மைதானா?
நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,

(crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள். . .
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections), , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.
சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும். . .
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் – அறிகுறிகள். . .
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர்