ஞாயிறு, 3 நவம்பர், 2013

இசைஞானி இளையராஜாவுடன் சந்தித்த நிகழ்வுகள்

மனித குலத்திற்கு தனது இசையால் பெருமை சேர்த்த இசை உலக மாமேதை இசைஞானி இளையராஜாவுடன் சந்தித்த நிகழ்வுகள்.







 

பல நொந்து போன இதயங்களுக்கு இதமான தனது இசையால் மருத்துவம் செய்த இசை மருத்துவர் இளையராஜா.

அவரது இசைக்கு மயங்காத இதயம் இல்லை என்றே சொல்லலாம், 

ஆன்மிக உலகிற்கு தனது இசையால் தொண்டு செய்து வருபவரும் இசைஞானி என்றால் அது முற்றிலும் உண்மை.

இன்று அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. 

எவ்வளவு பெரிய மாமனிதர் அவர்... இன்னும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
அவரை சந்தித்தது கனவா இல்லை நனவா என்று. நான் அவரை பார்த்த பிறகு எனது சுயநினைவுக்கு வருவதற்கே சில நிமிடங்கள் ஆனது. பேச்சே வரவில்லை. 

இன்முகம், அமைதி, எதையுமே வெளியில் காட்டிக்கொள்ளாத எளிமை இவைதான் இன்று நான் பார்த்த ராக தேவன் இளையராஜா.

பகவான் ரமண மஹரிஷி அவர்களுடைய அருளாலும் மகாவதார் பாபாஜி அவர்களின் கருணையினாலும் ஒரு சிவனடியாரான ஆன்மிக அருளாளர் இளையராஜா ஐயா அவர்களளோடு இருந்த இந்த (3.10.2013 - ஞாயிறு ) நாளை 
என்னால் மறக்க முடியாது.