சனி, 15 டிசம்பர், 2012










"ஓம்
கிரியா பாபாஜி நமஓம் "
இயற்பெயர் : நாகராஜ்
அகத்திய முனிவர் மற்றும்
ஆஞ்சநேயர் போல் ,பாபாஜியும்
ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக
வாழ்கிறார். உலகமெங்கும்
சென்று அருள்
மழை பொழிந்து கொண்டு
இருப்பவர்.பல
ஞானிகளை உருவாக்கியவர்.
சித்தர் போகரின் அருமந்த சீடர் !
அஷ்டமா சித்திகளை பெற்றவர்.
பாபாஜி, போகரிடம் சிஷ்யராக,
பல யோக சாதனைகளை, தியான
கிரியைகளை பழகினார். பின்
முருகப்பெருமானின் தரிசனம்
பெற்றார்.
பொதிகை மலையில்
அகத்தியரை நினைத்து கடும்
தவம் இயற்றினார். அவர்
காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த
போதிலும், மனம் தளராமல்
அகத்தியரின்
பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.
பின்பு அகத்தியர் காட்சி தந்து ,
பாபாஜிக்கு கிரியா,
குண்டலினி, பிராணயாம
தீட்சையை அளித்து ,
பாபாவை பத்ரிநாத்துக்கு
செல்லுமாறு பணித்தார். உலகம்
அதுவரை அறிந்திராத
ஒரு மாபெரும் சித்தராக
பாபாஜி உருவாவதற்கு அன்று
அகத்தியர்தான் அடித்தளம்
அமைத்தார்.
இமய மலை தொடரில் உள்ள
சஞ்சீவி மலையில்,
பாபாஜி கடும்தவம்
செய்து "சொரூப சமாதி"
அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம்
அவரை சூழ்ந்து அமைந்தது.
அவரது உடல் முதுமை,
பிணி ஆகியவற்றில்
இருந்து கடவுளின் அருளால்
அறவே விடுபட்டது.
ஜீவாத்மாவின் கருவியாக,
பாபாஜி ஒரு சித்தராக,
அரூபியாக மாறினார். அன்றில்
இருந்து மக்களுக்கு இல்லறத்தில்
இருந்து கொண்டே கிரியா
யோகத்தை கற்று யோகிகளாக வாழ,
வழிமுறை செய்தார்.
கிரியா யோகத்தின்
ஒளி விளக்காக
மகா அவதார்
பாபாஜி திகழ்கிறார்.
பாபாஜி, மீண்டும்
கிரியா யோகத்தை புத்துணர்ச்சி
பெறசெய்து , பல தவ புருஷர்களான
ஆதி சங்கரர், கபீர் தாஸ்,
லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர்,
பரமஹம்ச யோகாநந்தர் மூலமாக
இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும்
கிரியா யோகத்தைக்
கற்று முக்தி நிலையை அடைய
க்ரியா யோகத்தை கற்று தந்தார்.
க்ரியா யோகம் : க்ரியா யோக
பயிற்சியை தகுந்த குருவின்
மூலமாக தீவிரமாக செய்தால், அவர்
தனது பிறப்பு, இறப்பு கர்ம
வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக
நிலையை சீக்கிரமாக அடைய
முடியும்.
அரை நிமிடம் செய்யும்
ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு -
இறப்பு ஜென்மத்திற்கு சமமான
கர்மவினைகளை குறைக்கும்.
எட்டரை மணி நேர
கிரியா பயிற்சி, ஆயிரம் வருட
பிறப்பு - இறப்பு ஜென்ம
கர்மவினைகளை குறைக்கும்
பாபாஜி கூறுகிறார் :
" நீ ஒரு அடி தூரம்
என்னை நோக்கி வந்தால், நான்
பத்தடி எடுத்து வைத்து
உன்னிடம் வருகிறேன்."
 

வெள்ளி, 7 டிசம்பர், 2012










டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம் உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மனிதப் படுகொலைகள், மனித உரிமை
மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம். அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது. உறுப்புரை – 01 இல் ‘மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?

ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால அந்நியர் ஆட்சி முதல் இன்றைய ஜனநாயக ஆட்சி வரை மனித உரிமைகளுக்கு பூரண முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் பெரும்பான்மை ஆட்சியே அந்நாள் முதற்கொண்டு நடைபெற்று வருவதால், அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.

அதாவது, ‘சிறுபான்மையினருக்கு உரிமைகள்” என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் போது பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்த் தலைவர்களால் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அக்காலப்பகுதியில் சிறுபான்மையினருக்கென பல விசேட ஷரத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதோ ஓர் அதிகாரத்துக்கு உட்பட்டதாக காணப்பட்டதால் அதன் பூரண பயன்பாட்டை சிறுபான்மையினர் அனுபவிக்கவில்லை. இது போன்றே இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் எனும் போதும் தமிழ், முஸ்லிம், பறங்கியர் அடங்குகின்றனர். இவர்களின் உரிமைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன.

30 வருட கால போர்ச்சூழல் மறைந்து, நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, கொழும்பில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றால் நம் நாட்டு மனித உரிமையை என்னென்பது?

இதே நிலையில் தான் நம் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை 13இல் கூறப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஆனால், நம் நாட்டில் நடப்பதென்ன?

அண்மைக் காலமாக நாட்டில் மீண்டும் உருவெடுத்துள்ள வெள்ளை வேன் கடத்தல், மர்ம மனிதத் தாக்குதல், மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்ற சம்பவங்கள் மேற்கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தையே கேலிக்குரியதாக்குகின்றனவே?

உரிமைகள் ஏட்டளவில் தான். நடைமுறையில் எதையும் காணோம். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இடத்துக்கிடம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து, சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு மாநகரில் கூட இத்தகைய வெள்ளை வேன் ஆயுததாரிகளால் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது.

இதன் மூலம் ஒரு பிரஜை நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அவனது உரிமை மீறப்படுகின்றது என்பதுதானே அர்த்தமாகின்றது?

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா?
 

மனித உரிமைகள் கழக 12 வது தேசிய மாநாடு


மனித உரிமைகள் கழக 12 வது தேசிய மாநாடு


ஞாயிறு, 2 டிசம்பர், 2012













அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி

அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை ...... வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ

டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா

மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி

பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
 




பொய்யின்றி மெய்யோடு 
நெய் கொண்டு போனால்...

ஐயனை நாம் காணலாம்!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மதுரை ....-கவிஞர்.வைரமுத்து







மதுரை


பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகைமார்தம்
மெல்லடியும்
மயங்கி ஒலித்த
மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்
பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும்
- வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும்
ஆண்ட பரம்பரைச்
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும்
காணக் கிடைக்கும்
பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால்
இளமதுரை

மல்லிகை மௌவல்
அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம்
குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த
வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை -
நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன்
நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால்
- அவள்
கந்தக முலையில்
எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய
தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும்
தென்மதுரை

தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன்
என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும்
வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய
மாமதுரை - இது
மரபுகள்
மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப்
பூவென்றும் - அதன்
மலர்ந்த
இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
- அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய
பால்மதுரை - வட
மதுரா புரியினும்
மேல்மதுரை

மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும்
- அந்த
அந்நியரில்சில
கண்ணியரும்
ஆட்சிபுரிந்த
தென்மதுரை -
மீனாட்சியினால்
இது பெண்மதுரை

மண்ணைத் திருட
வந்தவரைத் - தம்
வயிற்றுப்
பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய
தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய
தூய்மதுரை

அரபுநாட்டுச்
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல்
- ஒரு
மண்டபம்
திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும்
கலைமதுரை - இது
கவிதைத் தமிழின்
தலைமதுரை

வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய
பாடல்களும்
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும்
தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும்
தென்மதுரை

போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
வளையொலியும்
தொடர்ந்து கேட்கும்
எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும்
தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள்
புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம்
பெருக்கியதில்
வேலைகள் இல்லாத்
திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள்
சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால்
வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் -
நதியைப்
பட்டாப் போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த
முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும்
பதிமதுரை






-கவிஞர்.வைரமுத்து

கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!













கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான் !