சனி, 16 மார்ச், 2013

சிவ மந்திரங்கள்







சிவ மந்திரங்கள்
சில பயனுள்ள சிவ மந்திரங்கள்;
மனதைத் திடப்படுத்துவது எதுவோ
அதுவே மந்திரம் எனப்படும்.உரு
(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என
திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால்
கிடைக்கும் நன்மையைப் பற்றிக்
கூறுகிறார்.திரு என்றால் பிரகாசமான
என்று அர்த்தம்.எல்லோரையும் கவரும்
காந்தசக்தி என்றும் கூறலாம்.வாழ்க
வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த
மந்திரமே!
நாம் சாதாரணமாக பேசும்
வார்த்தைகளுக்கு
சக்தி உண்டு;அதை விட திருமந்திரம்,
பெரிய புராணம்,கந்த சஷ்டிகவசம்,
கந்தரலங்காரம்,திருப்பாவை முதலான
தமிழ் ஆன்மீகப்படைப்புகளுக்கு நாம்
அவற்றை பாடும் போதும் மனதிற்குள்
ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.
இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே
சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில்
பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம்
கிடையாது.ஆனால்,
அவற்றை முறையாக
உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை
அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக
ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய
அறிவியல்துறை உருவாக்கப்பட்டு
இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு
மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது
மாற்றும் வலிமை உண்டு என
கண்டறியப்பட்டுவிட்டது.மேலும்
ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு
ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,
இங்கிலாந்து நாடுகளில்
நடைபெறுகின்றன.
வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில்
கூகுளில் தேடிப்பார்க்கவும்.
சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை
ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால்
காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால்
பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட
தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள்
கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற
மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள்
விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு
வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால்
திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால்
ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள்
கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான
மந்திரத்தை
தனக்கு ஆபத்தான வேளைகளில்
சூரியனுக்கு
எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி
ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து
முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால்
முக்காலமும் அறியும் ஆற்றல்
உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என
சொன்னால்
வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால்
பெண்கள்
வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால்
அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள்
கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம
ஜபித்தாலும்
மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம்
உண்டாகும்
 

செவ்வாய், 5 மார்ச், 2013

நால் வகை தோற்றங்கள்



நால் வகை தோற்றங்கள் 




நால் வகை தோற்றங்கள் !
எழு வகை பிறப்புகள் !!
அறு வகை அறிவுகள் !!!

புல்லாய், பூடாய், புழுவாய், மரமாகி,
பல் மிருகமாய், மனிதராய், பேயாய் கணங்களாய்
வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற
இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்தேன் எம்பெருமானே!"

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும் , எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப், பிறந்து, இறந்து, பிறந்து, உழலும்.

நால்வகைத் தோற்றங்கள்:

அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என்பவைகளாம்.
அவைகளுள்

அண்டசம் முட்டையிற் தோன்றுவன . சுவேதசம் வியர்வையில் தோன்றுவன . உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன . வித்து சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன . எழுவகைப் பிறப்புகள்:

தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். .

முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும்.

வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பூச்சிகளும் பிறக்கும்.

வித்திலே வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும்.

தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.

ஆறு வகை அறிவுகள்:

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும்.

அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும்.

புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள்.

சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள்.

கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள்.

தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். .

விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள்.

தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும்.

அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே, திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும்.

இப்படியே,கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம்.

எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே.

இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே.

ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

சனி, 2 மார்ச், 2013

நரகம் இல்லை



நரகம் இல்லை

Photo: ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செயதாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே.

- இப்பாடல் 'கார்த்திகை புராண ' த்தில் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் சுக்கல பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை மரம் ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தல் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்களின் பெரும் பலனை இந்தப் பாடல் விளக்குகிறது.

via சித்தர் மயம்

ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செயதாரேனும்
அவர்க்கில்லை நரகம் தானே.

- இப்பாடல் 'கார்த்திகை புராண ' த்தில் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை மாதத்தில் சுக்கல பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை மரம் ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தல் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்களின் பெரும் பலனை இந்தப் பாடல் விளக்குகிறது.

via சித்தர் மயம்

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்

Photo: சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும்

சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை, தொகை சரக்கு முறை (திரிகடுகு, திரிபலா, திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.

சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை, தொகை சரக்கு முறை (திரிகடுகு, திரிபலா, திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.

மனித உரிமைகள் கழகம் சர்வதேசஅமைப்பின் சார்பில் மதுரை கிழக்கு மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த நன்றி  அறிவிப்பு விழாவின் புகைப்பட தொகுப்பு 

உழைத்தவர்க்கும்  உதவியவர்க்கும் நன்றி.......

வெற்றிலை போடுவது ஏன்?




வெற்றிலை போடுவது ஏன்?
பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண
காரியத்தோடு உருவாக்க பட்டது தான்
முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள்
முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும்
சடங்குகளில்
பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள்
அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும்
தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல
காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல
விஷயம்
அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும்
நிறைய
பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான
விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த
சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம்
இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன்
வருகிறது என்பதற்கான
காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும்
போது உடம்பில் உள்ள வாதம் பித்தம்
சிலேத்துமம் போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும்
போதோ குறையும் போதோ நோய் வருகிறது.
என்று சொல்கிறார்கள் இது முற்றிலும்
சரியான காரணமாகும் இந்த
மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில்
உடம்பில் அமைந்துவிட்டால் நோய்
வராது என்பதை விட
நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல்
உடம்பிற்கு வருகிறது இந்த
மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க
தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும்
துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம்
வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில்
உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.
இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற
ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள
மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும்
நிலை அமைந்து விடுகிறது.
இதுமட்டுமல்லாது
தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு,
ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண
சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன
அதனால் தான் நமது விருந்துகளில்
வெற்றிலைக்கு முக்கிய
பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால்
வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும்
சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.
புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக
முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்
சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும்
முதுமையின் காரணமாக பெரிய
பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல
நேரங்களில் சாதாரண
எலும்பு முறிவே மரணத்தை பரிசாக
தந்து விடுகிறது. ஆனால்
பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு
எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம்
ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த
தாம்பூலம் தரிக்கும்
பழக்கமே ஒரு குறிப்பிட்ட
அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள்
வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால்
வகுக்க பட்டிருக்கிறது. காலையில்
சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில்
பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம்
மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும்
போது உடம்பில் பித்தம் ஏறாமல்
அது பாதுகாக்கும். அதே போல மதிய
உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம்
எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள
வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான தாம்பூலம்
தரிக்க வேண்டும்
என்பது நமது முன்னோர்களின்
கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல்
வருகிறது.!