ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

வேடு கட்டுதல்.

வேடு கட்டுதல்.
---------------------------


வேடு என்ற சொல்லுக்கு வேய்தல் என்ற பொருளுண்டு.வேடு கட்டுதல் என்பது பானை அல்லது உணவு இருக்கும் பாத்திரத்தின் வாயை துணியால் மூடி கட்டுவதே ஆகும்.

நான் சிறுவயதாக இருக்கும்போது கிராமப்புறங்களில் ஒரு பேச்சுவழக்கு உண்டு.இரவு படுக்கபோகும் போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வார்கள்”மறக்காம அந்த சோத்து பானையை வேடுகட்டி வச்சுட்டு படு”என்பார்கள்.

சோத்து பானை மட்டுமல்ல,குழம்பு இருக்கும் சட்டி மற்றும் எல்லா வகையான உணவுகளையும் வேடுகட்டி வைக்கும் பழக்கம் முன்பு இருந்தது ஆனால் இப்போது கிடையாது என்பது வருத்தமான விசயம்.உணவின் மீது நம் கை படாமல் வேடு கட்டி வைத்திருக்கும் உணவு பொருள் எத்தனை காலத்திற்கும் கெடாமல் இருக்கும்.

அந்த காலத்தில் சமைத்த தானிய உணவுகளையும் மற்றும் இறைச்சி உணவுகளையும் பல காலத்திற்கு வேடுகட்டி வைத்து சாப்பிட்டியிருக்கிறார்கள்.அந்த உணவுகள் கெடாமல் இருப்பதற்கு அவ்வப்பொழுது வெய்யிலிலும் வைத்து பிறகு பாதுகாத்து வைத்து சாப்பிடுவார்கள்.அவர்கள் ஆரோக்கியமாகவும்,எந்த நோய் நொடியின்றியும் வாழ்ந்தார்கள் ஆனால் இப்போது குளிர்சாதன பொருட்கள் வந்தாலும்,எவ்வளவும் நவீன வசதிகள் வந்தாலும் பண்டைய கால தொழிநுட்பத்திற்கு ஈடு இணை ஏது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக