சனி, 12 ஜனவரி, 2013

MAHA AVATHAR BABAJI

maha avathar babaji

Babaji

road safety week 7/1/2013

Photo: மனித உரிமைகள் கழகம் ( சர்வதேச அமைப்பு ) நிர்வாகிகளுடன் நான் ..., ( மனித உரிமைகள் கழகம் ( சர்வதேச அமைப்பு )  மதுரை மாவட்ட காவல்த்துறை  மற்றும் மேலூர் உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை நடத்திய சாலை  பாதுகாப்பு  வாரம் நிகழ்ச்சின்  ஒரு பகுதி )
மனித உரிமைகள் கழகம் ( சர்வதேச அமைப்பு ) நிர்வாகிகளுடன் நான் ..., ( மனித உரிமைகள் கழகம் ( சர்வதேச அமைப்பு ) மதுரை மாவட்ட காவல்த்துறை மற்றும் மேலூர் உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை நடத்திய சாலை பாதுகாப்பு வாரம் நிகழ்ச்சின் ஒரு பகுதி ) 

ஹனுமான் ஜெயந்தி

ஹனுமான் ஜெயந்தி :- நாம் செய்ய வேண்டியது

Photo: ஹனுமான் ஜெயந்தி :- நாம் செய்ய வேண்டியது

இன்று ஹனுமான் மற்றும் ராமபிரானை நினைத்து விரதம் இருப்பது மிகவம் நன்மை அளிக்கும் செயல் ஆகும். மேலும் ஹனுமான் மற்றும் பைரவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல் யுகத்தில் அதாவது த்ரேத யுகத்தில் ஒரு நாள் வாயு புத்திரனின் மைந்தனாகிய ஹனுமனை சனி பகவான் பிடிக்கச் சென்றுள்ளாராம். உடனே சனி பகவான் ஹனுமனது தலையில் அமர்ந்து கொண்டு உன்னை பிடிக்கப் போகிறேன் என்று கூறினாராம். அப்போது ஹனுமான் மிகப்பெரிய பாறைகளை தனது தலையில் ஒன்றன் மீது ஒன்றாக தூக்கி வைத்தாரம், பாரம் தாங்காத சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். ஹனுமனும் விட்டு விட்டார். ஆனாலும் சனிபகவான் கடமை தவறாதவர் அல்லவா ! மற்றொரு முறை மீண்டும் ஹனுமனை பிடிக்க வந்து ஹனுமனிடம் கேட்டார் , உன்னை எங்கிருந்து பிடிக்க வேண்டும் என்று ? அதற்கு ஹனுமான் முதலில் காலில் இருந்து பிடித்துக் கொள் என்றாராம். சனிபகவானும் அவரது காலைப் பிடிக்க செல்லும் பொது ஹனுமான் அவரை காலுக்கு கீழே வைத்து அழுத்த தொடங்கினாராம். மீண்டும் சனிபகவான் தன்னை விட்டு விடும் படி கேட்டுக் கொண்டாராம். அதற்கு ஹனுமான் என் பக்தர்களையும், ராம பக்தர்களையும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சத்தியம் செய் என்றாராம். சத்தியம் வாங்கிக் கொண்டு சனிபகவானை விட்டாராம். எனவே ஆஞ்சநேயரையும் ராமரையும் இன்று வழிபாடு செய்யுங்கள். உளுந்து வடிகள், பாயாசம் செய்து படையல் இடுங்கள். நல்லதே நடக்கட்டும். மேலும் ஆஞ்சநேயருக்கு செவ்வாய் கிழமை தோறும் குங்குமம் அபிசேகம் மற்றும் வெண்ணை சாற்றுதல் மிகச் சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்கும் பொழுது முதலில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி விட்டு பின்பு தான் அனுமன் பற்றி பாடல்கள், துதிகள் சொல்ல வேண்டும். ஏன் எனில் அந்த அளவுக்கு ராமர் மீது அவர் பற்று வைத்து உள்ளார். ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஆஞ்சநேயா.

திங்கள், 7 ஜனவரி, 2013

ஏக்கம்

ஏக்கம்

சமீபத்தில் நண்பர்களோடு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் திருச்சி அருகில் உள்ள திருபட்டுரில் உள்ள பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் சென்றோம் அந்த கோவில் வெளி வளாகத்தில் பழைய கோவில் ஓன்று உள்ளது அதன் சுற்று பாதையில் ஒரு ஓரமாக ஒரு புற்று போன்ற ஒன்று தென்பட்டது அதை புகைப்படம் எடுத்தேன் வரிசையாக எடுத்த படங்களை கணினி வழியாக பார்த்த பொது அதிசயமாக இருந்தது

ஒரு முனிவர் தவக்கோலத்தில் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றத்தினை பார்த்து அதிசைதோம் நண்பர்கள் அனைவரும் 

நீங்களும்  பாருங்கள் முடிந்தால் அருகில் இல்லவர்கள் சென்று தரிசித்து வாருங்கள் 
நலம் உண்டாகட்டும்...........

வெள்ளி, 4 ஜனவரி, 2013

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

புதன், 2 ஜனவரி, 2013

2012 இன் இனிய நினைவலைகள் இது