வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..!
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.

இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.

நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.

முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.

வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம்.

மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.

நீக்க வேண்டியவை:

இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

திங்கள், 29 ஜூலை, 2013

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும்


சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில்
சேர்க்க முடியும். அதற்கான
அரசாணை நகல் இது.சாதி மதம்
குறிப்பிட
விரும்பாதவர்கள் இதை நகல்
எடுத்து விண்ணப்பப் படிவத்துடன்
கொடுக்கலாம்.


வெள்ளி, 19 ஜூலை, 2013

இளமை கவிஞர் வாலி ............



மூன்று தலைமுறைக்கும்
முத்தான கவிதைகள் எழுதி
அன்றும், இன்றும், என்றும் ..........

இளமைக்கும்,
இலக்கியத்திற்கும்,
இறை தொண்டிற்கும்............

இடைவிடாது தொண்டு செய்த
இளமை கவிஞர்
வாலி ............

இன்று முதல் கவிதை எழுதுவதை
நிறுத்தி கொண்டு

வானுலக தேவர்களை
தனது புலமையால்
வசப்படுத்த  சென்று இருக்கிறார் .........


சனி, 13 ஜூலை, 2013

சரீர தேவாலய ரகசியம்

சரீர தேவாலய ரகசியம் - நூலில் இருந்து

Updated over a year ago
பரமஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரர் தன் 'சரீர தேவாலய ரகசியம்' என்ற நூலில் உடலே கோயில் என்று எழுதி இருக்கிறார்.
புகைப்படங்கள் மூலம்: நன்றி திரு. சாமீ.அழகப்பன் அவர்கள். http://machamuni.blogspot.com/2010/09/1_20.html http://machamuni.blogspot.com/2010/09/blog-post_21.html http://machamuni.blogspot.com/2010/09/blog-post_9990.html http://machamuni.blogspot.com/2010/09/4.html
சிவாலய படம் சேலம் சித்தர் கோயிலில் உள்ள சித்தர் சமாதியில் எடுக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

spritual

symbol


வியாழன், 23 மே, 2013

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்





பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்



1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்