தாத்தா
எனக்கு சொன்ன
அறிவுரை!
இறைவன் ஒரு மனிதனுக்கு
செல்வ வளத்தை கொடுக்கும்போது
கூடவே ஆணவத்தையும்
கொடுக்கின்றான்
வறுமையை கொடுக்கும்போது
நேர்மையை கொடுக்கின்றான்
கொடுத்த பிறகு
இறைவன் பார்க்கின்றான்
ஆணவம் அதிகரித்தால் செல்வத்தை
எடுத்து விடுகின்றான்
நேர்மை அதிகரித்தால்
வறுமையை எடுத்து விடுகின்றான்
ஆகவே வளம் வரும்போது நேர்மை வரவேண்டும்.
.
எது என் தாத்தா மொழி மட்டுமல்ல
இதுவே வாழ்க்கை தத்துவம்.
கடந்த 19.1.2010 அன்று விண்ணுலகம்
சென்ற எனது தாத்தாவுக்கு
இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம்
என் இதய அஞ்சலி செலுத்துகிறேன் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக