சனி, 19 மார்ச், 2011

சிவவாக்கியர் சிந்தனைகள்


சிவவாக்கியர் சிந்தனைகள் 052

கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்

எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்

பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்

மெய் கடந்து உம்முளே  விரைந்து கூடல் ஆகுமே.


எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். ஈசன் இருக்கும் இடம் எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே, லிங்கினை அழுத்தி, சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள் மனதிற்கு  மகிழ்வாக இருக்கும்...         

நன்றி நண்பர் (கே எம் தர்மா..)

என்றும் அன்புடன் 
சே.பா. சபரிராஜ் M.A.,M.Phil.,


ஞாயிறு, 13 மார்ச், 2011

உறவுகள்

உலகில் ஒவ்வொரு ஜீவராசியும் வாழ உறவுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். தனக்கென உறவுகள் யாரும் இல்லாத ஒரு மனிதரோ மற்ற உயிரினங்களோ வாழ்வில் விருப்பமின்றி விரக்தியுற்று வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணும் மனோநிலைக்குத் தள்ளப்படுதல் இயற்கை. ஒருவர் தனக்கு மிகவும் பிர்ய்மான ஒரு உறவினரை விதிவசத்தால் இழக்கையிலும் இத்தகைய விரக்தி மனப்பான்மை உருவாகக்கூடும், ஆனால் அந்த சமயத்தில் தன்னை விட்டுப் பிரிந்த உறவினரைத் தவிர ஏனைய உறவுகளில் பற்று வைத்திருப்பின் இத்தகைய விரக்தி நிலை மாறி வாழ்வில் மீண்டும் ஈடுபாடு ஏற்படலாகும்.

இவ்வுண்மையை விளக்கும் ஒரு ஆங்கிலக் கவிதை உள்ளது. அது ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதியது. அக்கவிதை போர்க்களத்தில் உயிரிழந்த ஒரு வீரனின் உடல் அவனது வீட்டில் கொண்டு வைக்கப்படுகையில் அவனது மனைவி உறும் துயரையும் துயரிலிருந்து அவள் மீள்வது குறித்த சம்பவத்தையும் விவரிப்பதாக அமைந்துள்ளது.

கணவனின் உயிரற்ற உடலை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். அவள் அதனைக் கண்டு மயங்கவில்லை புலம்பவுமில்லை, மாறாக துக்கத்தால் செயலிழந்த நிலையில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அத்தருணத்தில் அங்கே அவளது உதவிக்காக உடனிருந்த பெண்கள் அவள் அழ வேண்டும், இல்லாவிடில் அவள் அதிர்ச்சியிலே இறந்து விடுவாள் எனக்கூறி அவளுக்கு அழுகையை வரவழைக்கும் முயற்சியாக அவளது கணவனைப் புகழ்ந்து பேசினர். அவனது அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தனர். அவன் அனைவராலும் விரும்பப்பட்டவன் என்றும் நம்பிக்கைக்குரியவன் என்றும் போற்றினர். இருப்பினும் அவள் பேசவில்லை அசையவுமில்லை. அப்போது வேறொரு பெண் தன் இடத்திலிருந்து எழுந்து வந்து அவனது முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினாள். ஆனாலும் அவள் அசையவில்லை அழவுமில்லை. அப்போது தொண்ணூறு வயதான மூதாட்டி ஒருத்தி எழுந்து வந்து அப்பெண்ணின் குழந்தையை எடுத்து அவளது முழங்காலின் மீது வைக்கவும் கோடைக் காலத்தில் வரும் புய்லுக்கொப்பாக அவளது கண்களில் கண்ணீர் பெருகியது, "ஓ என் செல்வமே உனக்காகவே நான் வாழ்கிறேனடா!" என்று அக்குழந்தையை அணைத்தபடி கதறியழுது தன் துயரத்தை வெளிக்கொணர்ந்தாள்.

அந்த ஆங்கிலக் கவிதை வரிகளாவன:

Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee.'

Alfred Lord Tennyson

உறவுகளின் மீது பற்றுள்ள வரையிலேயே ஒருவனுக்கு உலக வாழ்க்கை பிடிக்கும். உறவுகளை அவன் வெறுக்கும் நிலை ஏற்படுகையில் உலக வாழ்வினை அவன் வெறுப்பான். இதுவே இயற்கை நியதி. உலகில் வாழ்வதற்கு நம் அனைவருக்கும் முதற்கண் உறவுகள் அவசியம். உறவுகளே நம் வாழ்நாள் உள்ளவரையிலும் நமக்குத் துணை. செல்வமும் செருக்கும் உறவுகள் தரும் சுகத்தைத் தர மாட்டா. உலகில் ஒருவருக்கு அவரது குடும்பத்தார் மட்டுமே உறவாவதில்லை உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிர்கள் யாவுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வோர் பிற யாரையு்ம்விட அதிக மன மகிழ்ச்சியுடன் பேரானந்த வாழ்வு பெறுவதுறுதி. பல சமயங்களில் உடன் பிறந்தோரே ஒருவருக்கு ஜன்மப் பகையாக விளங்குவதும் உண்டு.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தையிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி

என்று இத்தகைய அன்பில்லாத மனிதர்களைப் பற்றி மஹாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

ஆகவே அனைவரும் நமக்கு உறவு எனக் கொண்டு நாம் வாழ்வோமாகில் அனைவரும் நம்மை உறவென எண்ணி நம்மிடம் மிக்க அன்பைப் பொழிந்து நமக்கு என்றும் துணையாக விளங்குவர். அப்பொழுது வாழ்வில் எத்தகைய துன்பங்கள் நமக்கு வரினும் அவற்றையெல்லாம் தீர்த்து வைக்க நாம் தேடிக்கொண்ட உறவுகள் கை கொடுக்கும்.

என்றும் அன்புடன் 
சே.பா. சபரிராஜ் M.A., M.Phil.,

நன்றி ஏ கே ஆர் .

சனி, 12 மார்ச், 2011

சுனாமியால் பாதிக்கப்பட்ட
எனது அருமை ஜப்பானிய
சகோதர சகோதரிகளுக்கு
கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். 
இறைவா இதுபோல இனிமேல் 
நடக்காமலிருக்க அருள் புரிவாய்.

செவ்வாய், 8 மார்ச், 2011

ஆண்களுக்குத் தாலி

ஆந்திராவின் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் புலரேவு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள

மீனவப் பெருங்குடியினர் ஒடியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களின்
கலாச்சார முறைமைகள், குறிப்பாக திருமணச் சடங்குகள் மற்றவர்களிடமிருந்து

முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன

இவர்கள் தனித் தனி திருமணங்கள் நடத்துவது இல்லை. மாறாக, ஒரு சில வருடங்களுக்கு

ஒரு முறை, ஒரே மேடையில், நூற்றுக்கணக்கான திருமணங்களைக் கூட்டாக நடத்தி
முடிக்கிறார்கள்.
மேலும், வரதட்சணை என்பது இவர்களிடம் முற்றிலும் இல்லை. ஆனாலும், மணமகனை ரூபாய்

நோட்டு மாலைகளால் அலங்காரம் செய்கிறார்கள்.
மேலும், திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும்
ஆண்களுக்குத் தாலி கட்டி முடிச்சுப் போடுகிறார்கள்.
2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாளை மீண்டும் ஒரு மெகா திருமண வைபவத்திற்கு இந்தக்

கிராமம் தயாராகி வருவதால் இக்கிராமம் பற்றிய செய்தி ஊடகங்களை அடைந்துள்ளது.

.by Sabariraj Baskaran on Tuesday, March 8, 2011 at 7:27pm.

உங்கள் லட்சியங்கள் நிறைவேற

இன்றைய சிந்தனைக்கு::::உங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்:


                      உங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்:

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.

அதற்கு என்ன செய்யலாம்?. பயனுள்ள 20 டிப்ஸ் :
1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்' என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்' ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.
2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.


7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.


8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.
10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக - மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.
11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.
12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் - மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்...
13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.


14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.

15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.
17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.
18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.
19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

நன்றி: கே எம் . தர்மலிங்கம் அய்யா. 

திங்கள், 7 மார்ச், 2011

என் இனிய முகநூல் அம்மக்கள், அக்காக்கள், தங்கைகள், தோழிகள், தோழமைகள்,மனித உரிமைகள் கழக (சர்வதேச அமைப்பு ) மகளிர் உறுபினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் மற்றும்  அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 

சனி, 5 மார்ச், 2011

தமிழ் இனி மெல்ல சாகும்... by,M.Ela

கண்டிப்பாக ஒரு முறை இந்த வீடியோ பாருங்க நண்பர்களே .

நாம் எங்கே போய்கொண்டிருக்கிறோம் ?