சனி, 21 மே, 2011

நண்பரின் பிறந்தநாள் வாழ்த்து

அன்பும் பண்பும் பெருகி 
அறிவும் ஆற்றலும் பெற்று 
குன்றாத செல்வமும் 
குலையாத ஆரோக்யமும்
குறைவில்லாத வாழ்வும் பெற்று 
வாழ்வாங்கு வாழ்க நீவிர் !

நண்பரின் பிறந்தநாள் வாழ்த்து 

கொங்கணர்

கொங்கணர் :
போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர்கொங்கணர்
கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’....திருவள்ளுவரின் மனைவி வாசுகி.

கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது. திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள்.

அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க, சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்த யோகி ஆகவேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது.

கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.

‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’  ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’  ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது. ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது.’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்.’’

‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது.

பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி. தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும்.

நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும். தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்!’’ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.

‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்.’’ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது.எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.  அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம். யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம்.உதாரணத்திற்குவிசுவாமித்திரர் ஒருவர் போதுமே...!

இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர்,  தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘ சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது. யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார்.

நன்றி கே எம் தர்மா ஐயா .

புதன், 18 மே, 2011

யோசித்து பாருங்கள்

சாராய விற்பனையில் சாதனை படைத்த தி மு க அரசு 

குடிகாரர்களின் விட்டிலுல்லோர் சாபத்தால் சாம்பலானது 

பதிய அரசாவது சாராய விற்பனையை முறைபடுத்தி

விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும் 

மதுக்கடைகளை உடனடியாக ஊரின் வெளியில் மாற்றிட வேண்டும்

சாராய விற்பனையில் இதே  முறை  இந்த  ஆட்சியிலும் தொடர்ந்தால்

ஐந்து   ஆண்டுகள் கழித்து

அ தி மு க அரசும்  சாபத்திற்கு  ஆளாகும்  என்பதில்  ஐய்யமில்லை 

தயவு  செய்து யோசித்து பாருங்கள் ஆட்சியாளர்களே .!!!!

உங்கள் அன்பு நண்பன் சே. பா. சபரிராஜ் .
நேர்மையானவன் உண்மைகேற்றவாறு தனது சிந்தனையை மாற்றிக்கொள்கிறான் ! ----அதே சமயம்;
நேர்மையற்றவன் தனது சிந்தனைகேற்றவாறு உண்மையை மாற்றிக்கொள்கிறான்                               




என்றும் அன்புடன் 
சே பா சபரிராஜ் 

திங்கள், 16 மே, 2011

ஈரோடு மகிமை அறிவோமே நாமும்தான் !!!
தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு - ஈர ஓடு, பைரவபுராணத்தில் வரும் கருத்தின்படி, தாட்சாயணனின் யாகத்தில் சிவனை மதிக்காததால் அந்த யாக குண்டத்தில் விழுந்து பார்வதி தேவி தன்னை மாய்த்துக் கொண்டதை அறிந்த சிவன் மிகவும் கோபம் கொண்டு ருத்திரன் தாண்டவம் கொண்டார். பிறகு பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தபின் பிரம்மஹத்தி தோஷத்தினைப் போக்க அலைந்து திரிந்த சிவன் ஈரோடு வந்தபொழுது அவரின் உள்ளங்கையில் விடுபடாமலிருந்த அந்த பிரம்ம கபாலம் விடுபட்டு கீழே விழுந்தது. அந்த இடத்தில் காபால தீர்த்தம் இருந்ததாக குறிப்பிடுகிறது. இப்போழும்கூட அந்த புனித கபால தீர்த்தம், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் அருகில் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மேலும் அந்த கபாலம் சிதறியதால் அவைகள் வெள்ளோடு(வெள்ளை நிறத்தோடும்), பேரோடு(பெரிய ஓடாகவும்), சிற்றோடு (சிறிய ஓடாகவும்)என்றும், தற்போது ஈரோடு என்று அழைக்கப்படும் நகருக்கருகில் அமைந்துள்ளது எனக் கூறப் படுகின்றது.


சனி, 14 மே, 2011

சைவ சமயம்

ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே 
இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் 
இருந்தது என்றும், ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் 
உலகம் முழுமையும் பரவிக்கிடத்தது. என்று அறியும் போது 
நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். அதன் விவரங்களை 
எனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை 
வாசகர்கள் அறிவார்கள். அதனால் முதல் சமயமான 
சைவ சமயம் இந்து மதத்தின் இதயமாக எப்படி இருக்கிறது என்பதை 
நாம் அனைவருமே நன்கு உணர்ந்திருக்கிறோம். 
அப்படிப்பட்ட சைவ சமயத்தின் கருத்துக்களை ஒரளவு சிந்தனை 
செய்தால் நமது மதத்தின் வரலாற்று பின்னணி
யை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். 
அப்படி தெரிந்து கொண்டால்தான் நம்மை பற்றிய பெருமிதம் நமக்கே வரும்...
நன்றி குருஜி
நன்றி கே எம் தர்மா அய்யா. 

ஞாயிறு, 1 மே, 2011