திங்கள், 16 மே, 2011

ஈரோடு மகிமை அறிவோமே நாமும்தான் !!!
தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு - ஈர ஓடு, பைரவபுராணத்தில் வரும் கருத்தின்படி, தாட்சாயணனின் யாகத்தில் சிவனை மதிக்காததால் அந்த யாக குண்டத்தில் விழுந்து பார்வதி தேவி தன்னை மாய்த்துக் கொண்டதை அறிந்த சிவன் மிகவும் கோபம் கொண்டு ருத்திரன் தாண்டவம் கொண்டார். பிறகு பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தபின் பிரம்மஹத்தி தோஷத்தினைப் போக்க அலைந்து திரிந்த சிவன் ஈரோடு வந்தபொழுது அவரின் உள்ளங்கையில் விடுபடாமலிருந்த அந்த பிரம்ம கபாலம் விடுபட்டு கீழே விழுந்தது. அந்த இடத்தில் காபால தீர்த்தம் இருந்ததாக குறிப்பிடுகிறது. இப்போழும்கூட அந்த புனித கபால தீர்த்தம், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் அருகில் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மேலும் அந்த கபாலம் சிதறியதால் அவைகள் வெள்ளோடு(வெள்ளை நிறத்தோடும்), பேரோடு(பெரிய ஓடாகவும்), சிற்றோடு (சிறிய ஓடாகவும்)என்றும், தற்போது ஈரோடு என்று அழைக்கப்படும் நகருக்கருகில் அமைந்துள்ளது எனக் கூறப் படுகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக