மதுரைமாவட்டம் மேலூரில்சாலை பாதுகாப்பு வார விழா
மேலூர், ஜன. - 9 - மதுரை மாவட்டம் மேலூரில் போக்குவரத்து காவல் துறை மற்றும் மனித உரிமைகள் கழகம் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு மேலூர் தாசில்தார் மோகனா தலைமை வகித்தார். மேலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம், போக்குவரத்து துறை ஆய்வாளர் சக்திவேல், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பாலசந்தர், மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பு சபரிராஜ், ராஜபாண்டியன், மீனாட்சி சுந்தரம் மற்றும் பாரத சாரண இயக்கம் ராமானுஜம் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர். பேரணி மேலூர் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி பஸ் நிலையம் வந்தடைந்தது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். எஸ்.ஐ. பாலமுருகன் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. புகழேந்தி வரவேற்றார். கூட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் காண்பிக்கப்பட்டது. கூட்டத்திற்கு காவல் துறையினரும், போக்குவரத்து துறையினரும், மனித உரிமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக