செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

நலம் தரும் இயற்கை





நலம் தரும் இயற்கை










.நலம் தரும் இயற்கை
என்றும் இளமையோடு வாழ திருமூலர்
கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம்
என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர்
ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல்
அல்லது குறைவதால் தான்.
இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும்,
காற்றினால் வாத நோய்களும், நீரால் கப
நோய்களும் உண்டாகின்றன.
நமது தேகத்தை நீட்டித்து,
ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர்
எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும்
வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று
குறிப்பிடுகிறார் திருமூலர்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும்
உண்டு. தேவர்கள் பாற்கடலைக்
கடைந்தபோது தோன்றிய
அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
"பெற்ற தாயைவிட
கடுக்காயை ஒருபடி மேலானது என்று
கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய்
வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம்
வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப்
பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின்
சுவை துவர்ப்பாகும்.
நமது உடம்புக்கு அறுசுவைகளும்
சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும்
நோய் வரும். நமது அன்றாட உணவில்
துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.
துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி
செய்வதாகும். ஆனால் உணவில்
வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப்
பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச்
சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத்
தேவையான துவர்ப்பைத் தேவையான
அளவில் பெற்று வரலாம். கடுக்காய்
அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும்
கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும்
பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக
அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில்
தினசரி ஒரு ஸ்பூன்
அளவு இரவு உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த
வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண்
பார்வைக் கோளாறுகள், காது கேளாமை,
சுவையின்மை, பித்த நோய்கள்,
வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண்,
தொண்டைப்புண், இரைப்பைப்புண்,
குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல்,
படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில்
உண்டாகும் புண், மூத்திர எரிச்சல்,
கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம்,
சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி,
பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய
நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல்
பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின்
உயிரணுக் குறைபாடுகள் போன்ற
அனைத்துக்கும் இறைவன் அருளிய
அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர்
கூறும் பாடல் ..
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என
தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)
சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம்
என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில்
சாப்பிட்டு வர நோய்கள்
நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய்
வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய
பொக்கிஷமாகும்
 

நட்பு


நட்பு


வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன்


Photo: அறிவியல் மேதை சர்.சி.வி.
இராமன் சி. வி. இராமன்
பற்றி தகவல் !!!!
சர் சந்திரசேகர வெங்கட ராமன்
(நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970)
பெரும் புகழ் நாட்டிய இந்திய
அறிவியல் அறிஞர். இவர் 1930ல்
இயற்பியல் துறைக்கான நோபல்
பரிசைப் பெற்றார்.
ஒளி ஒரு பொருளின்
ஊடே செல்லும்
பொழுது சிதறும்
ஒளியலைகளில் ஏற்படும்
அலைநீள மாற்றத்தை இவர்
கண்டுபிடித்தார். இப்படிச்
சிதறும் ஒளியின் அலைநீள
மாற்றதிற்கு இராமன்
விளைவு (Raman Effect)
என்று பெயர். இக்கண்டுபிடிப்ப
ுக்குத் தான் இவருக்கு நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்ப
ு இன்று பொருள்களின் பல
விதமான பண்புகளைக் கண்டறிய
(பொருளுக்கு கேடு ஏதும்
நேராமலும்) மிகவும்
பயனுடையதும் உலகில் புகழ்
பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள்
தமிழ்நாட்டிலே உள்ள
திருச்சிராப்பள்ளியில்
பிறந்தார். சென்னையிலே உள்ள
பிரெசிடென்சிக் கல்லூரியில்
1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல்
பி.ஏ பட்டம் பெற்றார்.
கல்லூரியில் முதலாவதாக
நின்று தங்கப் பதக்கம் பெற்றார்.
அப்பொழுது அவருக்கு, 16
வயது தான் நிறைந்திருந்தது.
பின்னர் 1907ல் இவர்
முதுகலை பட்டமும் பெற்றார்.
அதிலும் இவர் உச்சச்
சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக
இந்தியாவிலேயே படித்த
ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல்
பரிசு கிடைத்தது முதல்
முறையாகும்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம்
பெற்றதும், அறிவியல்
துறை சார்ந்த வேலை வாய்ப்புகள்
இல்லாததால், இந்திய அரசுப்
பணவியல் துறையில் 1907ல்
ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.
என்றாலும் பணியின்
கூடவே கொல்கத்தாவில் உள்ள
இந்திய அறிவியல் வளர்ச்சிக்
கழகத்தில் (Indian Association for the
Cultivation of Science), ஒளிச்சிதறல்
பற்றி செயல்வழி ஆய்வுகள்
நடத்தி வந்தார். பின்னர் 1917ல்
கொல்கத்தாப் பல்கலைகழகத்தில்
புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த
பாலித் பீட இயற்பியல்
பேராசிரியராகச் சேர்ந்தார்.
கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள்
கழித்த பிறகு, இவர்
பெங்களூரில் உள்ள இந்திய
அறிவியல் கழகத்தில் (Indian
Institute of Science) 15 ஆண்டுகள்
கழித்தார். அதன் பின்
அவராகவே நிறுவிய இராமன்
ஆய்வுக்கழகத்தில் (Raman Research
Insitute) இயக்குநராக
கடைசி நாட்கள்
வரை பணியாற்றி வந்தார்.
சி. வி. இராமன் 1926ல் இந்திய
இயற்பியல் ஆய்விதழ் (Indian
Journal of Physics) என்னும்
அறிவியல்
இதழை நிறுவி அதன்
தொகுப்பாசிரியராகவும்
பணிபுரிந்தார். இந்திய
அறிவியல் அறிவுக்கழகத்தைத்
(Indian Science Academy)
ஆரம்பித்து, பின்னர் தானே அதன்
தலைவராகவும் தொடக்கம் முதலாக
இருந்து பணியாற்றினார்.
அதனுடைய அறிவியல்
நடப்புகளை வெளியீடு
செய்வதிலும் முன் நின்றார்.
அதுமட்டும் அல்ல இவர்
பெங்களூரில் இன்றைய
அறிவியல் கழகம் (Current Science
Association) என்னும் கழகத்தைத்
தொடக்கி, அதன் தலைவராகவும்
பணி புரிந்து, அக்கழகத்தின்
வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ்
(Current Science) என்னும் ஒர்
அறிவியல் ஆய்விதழையும்
நிறுவினார்.
இவர் வயலின், மிருதங்கம் போன்ற
இசைக் கருவிகள் பற்றியும்
நன்கு ஆய்வு செய்து புதுக்
கண்டுபிடிப்புகள்
செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக
இருக்கின்றது என்பது பற்றியும்
இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின்
மகனான சுப்பிரமணியன்
சந்திரசேகரும் நோபல்
பரிசு பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1929ல் ஆண்டில்
இங்கிலாந்து அரசியாரால் 'சர்'
பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல்
'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.


அறிவியல் மேதை சர்.சி.வி.
இராமன் சி. வி. இராமன்
பற்றி தகவல் !!!!
சர் சந்திரசேகர வெங்கட ராமன்
(நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970)
பெரும் புகழ் நாட்டிய இந்திய
அறிவியல் அறிஞர். இவர் 1930ல்
இயற்பியல் துறைக்கான நோபல்
பரிசைப் பெற்றார்.
ஒளி ஒரு பொருளின்
ஊடே செல்லும்
பொழுது சிதறும்
ஒளியலைகளில் ஏற்படும்
அலைநீள மாற்றத்தை இவர்
கண்டுபிடித்தார். இப்படிச்
சிதறும் ஒளியின் அலைநீள
மாற்றதிற்கு இராமன்
விளைவு (Raman Effect)
என்று பெயர். இக்கண்டுபிடிப்ப
ுக்குத் தான் இவருக்கு நோபல்
பரிசு அளிக்கப்பட்டது.
இக்கண்டுபிடிப்ப
ு இன்று பொருள்களின் பல
விதமான பண்புகளைக் கண்டறிய
(பொருளுக்கு கேடு ஏதும்
நேராமலும்) மிகவும்
பயனுடையதும் உலகில் புகழ்
பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள்
தமிழ்நாட்டிலே உள்ள
திருச்சிராப்பள்ளியில்
பிறந்தார். சென்னையிலே உள்ள
பிரெசிடென்சிக் கல்லூரியில்
1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல்
பி.ஏ பட்டம் பெற்றார்.
கல்லூரியில் முதலாவதாக
நின்று தங்கப் பதக்கம் பெற்றார்.
அப்பொழுது அவருக்கு, 16
வயது தான் நிறைந்திருந்தது.
பின்னர் 1907ல் இவர்
முதுகலை பட்டமும் பெற்றார்.
அதிலும் இவர் உச்சச்
சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக
இந்தியாவிலேயே படித்த
ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல்
பரிசு கிடைத்தது முதல்
முறையாகும்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம்
பெற்றதும், அறிவியல்
துறை சார்ந்த வேலை வாய்ப்புகள்
இல்லாததால், இந்திய அரசுப்
பணவியல் துறையில் 1907ல்
ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.
என்றாலும் பணியின்
கூடவே கொல்கத்தாவில் உள்ள
இந்திய அறிவியல் வளர்ச்சிக்
கழகத்தில் (Indian Association for the
Cultivation of Science), ஒளிச்சிதறல்
பற்றி செயல்வழி ஆய்வுகள்
நடத்தி வந்தார். பின்னர் 1917ல்
கொல்கத்தாப் பல்கலைகழகத்தில்
புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த
பாலித் பீட இயற்பியல்
பேராசிரியராகச் சேர்ந்தார்.
கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள்
கழித்த பிறகு, இவர்
பெங்களூரில் உள்ள இந்திய
அறிவியல் கழகத்தில் (Indian
Institute of Science) 15 ஆண்டுகள்
கழித்தார். அதன் பின்
அவராகவே நிறுவிய இராமன்
ஆய்வுக்கழகத்தில் (Raman Research
Insitute) இயக்குநராக
கடைசி நாட்கள்
வரை பணியாற்றி வந்தார்.
சி. வி. இராமன் 1926ல் இந்திய
இயற்பியல் ஆய்விதழ் (Indian
Journal of Physics) என்னும்
அறிவியல்
இதழை நிறுவி அதன்
தொகுப்பாசிரியராகவும்
பணிபுரிந்தார். இந்திய
அறிவியல் அறிவுக்கழகத்தைத்
(Indian Science Academy)
ஆரம்பித்து, பின்னர் தானே அதன்
தலைவராகவும் தொடக்கம் முதலாக
இருந்து பணியாற்றினார்.
அதனுடைய அறிவியல்
நடப்புகளை வெளியீடு
செய்வதிலும் முன் நின்றார்.
அதுமட்டும் அல்ல இவர்
பெங்களூரில் இன்றைய
அறிவியல் கழகம் (Current Science
Association) என்னும் கழகத்தைத்
தொடக்கி, அதன் தலைவராகவும்
பணி புரிந்து, அக்கழகத்தின்
வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ்
(Current Science) என்னும் ஒர்
அறிவியல் ஆய்விதழையும்
நிறுவினார்.
இவர் வயலின், மிருதங்கம் போன்ற
இசைக் கருவிகள் பற்றியும்
நன்கு ஆய்வு செய்து புதுக்
கண்டுபிடிப்புகள்
செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக
இருக்கின்றது என்பது பற்றியும்
இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின்
மகனான சுப்பிரமணியன்
சந்திரசேகரும் நோபல்
பரிசு பெற்றார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1929ல் ஆண்டில்
இங்கிலாந்து அரசியாரால் 'சர்'
பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல்
'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.
 

"புலிக்குகை"



Photo: மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும் :-) நன்றி அண்ணன்  Nesamithran Mithra

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷத்தின் - மகிமை



ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?
குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர். இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
முக்கியகுறிப்பு :
மனநிலை பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றவர்கள், நோயுற்றவர்கள், பிரார்த்தனை வைப்பவர்கள், கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஏனெனில் அவர்களை சிவன் தன்கண்போல் காப்பார்.

பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்".. பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.
மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ""ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

திருநீறு அணிவது ஏன்.?

திருநீறு அணிவது ஏன்.? 



நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும். விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். 2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

சனி, 9 பிப்ரவரி, 2013

ஜான்சி ராணி

ஜான்சி ராணி 

ஜான்சியின் மாவீர ராணி லக்ஷ்மிபாய்
ஒரிஜினல் அபூர்வ புகைப்படம்தான் இது...
அடிமைபடுத்த
நினைப்பவர்களை அடித்து நொறுக்கிய
இப்படி ஒரு வீர பெண் இன்றும் தேவை...!
 — 

ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு

ஸ்ரீ மஹா பெரியவா அருள்வாக்கு


" ஈஸ்வரரின் ஆபிஸ் பெரிது. நேரடி தொடர்பு கொள்வது கடினம். ஆனால் குருவின் ஆபீஸோ சிறியது. எளிதாக நேரடி தொடர்பு கிடைத்துவிடும். சீடனுக்காக ஈஸ்வரரிடம் வாதாடி அனுக்கிரஹங்களை பெற்று தந்துவிடுவார். எல்லா சொந்தங்களையும் விட பரம கருணையோடு நம்மை காப்பாற்றுவார். எனவே குரு மூலமாக ஈஸ்வரனை அடைவது எளிது "

light

நவீன உலகின் கொத்தடிமைகள்

நவீன உலகின் கொத்தடிமைகள்


சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெரிய 
துணிக்கடைக்கு சென்றிருந்தேன். இரவு 9 மணி. 
அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த
களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட
வைத்த சிறு புன்னகையுடன்
துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்
அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப்
போனால் 25 வயது இருக்கலாம்.


‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய
இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற
கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க
திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய
பேரு இருக்கோம். 150 பேராச்சும்
இருப்போம்..’’
‘‘தினமும்
எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11
மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க..
கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட்
கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன்.
காலையில வரணும். நைட் போகனும்.
அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச
பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில
எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம்
நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க
நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான்
உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில
சேர்க்கும்போதே அதை எல்லாம்
சொல்லித்தான் சேர்ப்பாங்க.
மீறி உட்கார்ந்தா கேமராவுல
பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’
- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட
நேரம் பேசிக் கொண்டிருப்பதையும்
சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும்.
அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக
துணிகளை எடுத்து வைத்தபடியேப்
பேசுகிறார்.
‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற
ஏதாவது முன்பணம், கல்யாணம்
ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம்
உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது.
இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும்
செலவு இல்லை.
சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம்
அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல
போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப்
பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது.
அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும்
ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து
மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம்
வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும்
பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான்.
இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு.
அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய்
சம்பளத்துலப் கபிடிச்சுக்குவாங்.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா?
அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு.
ஆனால் சம்பளம் கபிடிச்சுக்குவாங். அதனால
நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம்
ஊருக்குப் போயிட்டு வருவேன்.
அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த
லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப்
போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப்
போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க
முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல
எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும்
சில சுடிதார் மெட்டீரியல்
கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க.
உங்களுக்கு என்ன விலையோ, அதான்
எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப்
பார்க்குறதுக்குப்
பதிலா ------ ஸ்டோர்ஸ்ல வேலைப்
பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையில­
ேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க
முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட
கம்மியா சம்பளம் கொடுப்பாங்க.
இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும்
சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக்
காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப்
பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப்
பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப்
களாபார்த்திருக்கீங்?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு.
எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப்
போயிட்டு வருவேன்.’’
- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம்
விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம்
முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும்
இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள்.
அவர்களின்
உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் அந்த பிரமாண்ட
கட்டடம் ஓர்


ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது


நவீன உலகின் கொத்தடிமைகள் ............ 
நீண்ட பெருமூச்சுடன் வெளியேறினேன் 
அந்த அங்காடி தெருவினை விட்டு 




இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்



Photo: today my clik.
இதுதாண்டா  இந்தியா.
i love  ♥ India .raja

இணைந்தே இன்னும் பல   சாதனைகள் செய்வோம் 

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013


எனது அன்பு கமல் அவர்களுக்கு அன்புடன் உங்கள் ரசிகனாக விஸ்வரூபம் பற்றி எனது விமர்சனத்தை எழுதி இருக்கிறேன்.

தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிறைய பேசலாம்
தங்களது கலை உலக பயணம் சிறக்க நான் வணங்கும் அந்த ஈசனை வேண்டுகிறேன். உங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டாலும் என் போன்றோர் உங்களுக்காக உலகம் முழுவதும் நிச்சயமாக வேண்டிக்கொள்வர் என்பதில் ஐயம் இல்லை.

விரைவில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எதிர்பார்க்கிறோம்.

S.B. SABARIRAJ M.A., M.Phil.,
HUMAN RIGHTS ORGANAIZATION (AN INTERNATIONAL)
ZONAL REPORTER OF HUMAN RIGHTS MONTHLY MAGAZINE,
MADURAI.
CELL: 9487425704. .

விஸ்வரூபம்

விஸ்வரூபம்



என் இனிய நண்பர்களே நேற்று கமல்ஹாசன் தயாரித்து எழுதி  இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படம் பார்த்தேன்

நண்பர்களோடு நேற்று இரவு காட்சி பார்த்தேன்

தயாரிப்பாளராக கமல் ரெம்பவே கஷ்டபட்டிருக்கிறார்.

முதலில் படம் துவங்கும்போதே தனது சலங்கைஒலியினை சரியாக ஒலித்து நடனத்தால் கமல்  இன்னும் நான் சளைக்கவில்லை  என்று நிரூபித்து  இருக்கிறார். தனது தொற்றத்தினை  மாற்றி மாற்றி நடிக்கும் பொது தனக்கே உரித்தான கலையினை சரியாக  வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகராக  எப்போதும் போல தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

 

இயக்குனராக கமல் இந்த விஸ்வரூபதால். எங்கயோ எட்டமுடியாத உயரத்தில் வெற்றிக்கொடி  நட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு  களத்தினை தேர்வு செய்வதற்கே அவர் நிறைய சிரமபட்டிருக்க வேண்டும். அத்தைனையும் நேர்த்தி.

கேமரா கோணங்களும் படப்பிடிப்பும் ஒலி, ஒளி பதிவும் அருமை.

கதாசிரியர் கமலஹாசனுக்குதான் சோதனைமேல் சோதனை போதுமடா  சாமி என்றாகிவிட்டது. தேர்வு செய்த கதை கரு எல்லாமே நமது உலக நன்மைகானது மற்றும் உலக அமைதிக்கானது தானே தவிர படத்தில் எந்த ஒரு மதத்தினையும் இனத்தினையும் எந்த ஒரு சமூகத்தினையும் இழிவு படுத்த முற்படவில்லை கமல்.

கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு மாபெரும் உயரத்திற்கு  இந்திய சினிமாவினை கொண்டு சென்று இருக்கிறார்.


கமல் இறை சிந்தனை நிறையவே செய்து இருக்கிறார்.


எம்மததவரும் சம்மதத்தோடு பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய படம் விஸ்வரூபம்.

ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் விதமாக இருக்கிறது விஸ்வரூபத்தில் அனைத்து  அம்சங்களும்.



உலகநாகன் கமலே அன்றி வேறு யாரும் இல்லை...

படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்லாமல் படம் பார்க்க சொல்லுங்கள் அப்போது தான் அவர்களுக்கு படத்தின் தரம் தெரியும்.

வாழ்க வையகம்
வாழிய பாரத மணித்திருநாடு.










புதன், 6 பிப்ரவரி, 2013

இலஞ்சம்

இலஞ்சம் 

paasam

மனித நேயம் போற்றுவோம்

மனித நேயம் போற்றுவோம் 



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!

 அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!





அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ
கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில்
விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ
கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட
காட்சி ஞாபகத்தில் எழுகிறது...
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித்
திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான
பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்...
இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம்
பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம்
மகிழ்ச்சியடைகிறது...
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்
இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்...
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்
ஆயினும்… உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு...
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு வாழ்க்கை இதுதானென்று...!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு உறவுகள்
இதுதானென்று...! 

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

sachin

sachin tendulkar
when he was a baby


maamadurai portuvom




maamadurai potruvom




பூணூல் என்றால் என்ன?;
---------------------------------------


பூணூல் என்பதற்கு, பூ+நூல் என்றும்,பூண்+நூல் என்றும் சான்றோர்கள் கூறுகிறார்கள்.நம் சமயத்தில் நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
நூல் ஒரு தகவல் சம்பந்தமானது. நாம் சிறு வயதில் தீப்பெட்டியை நூலில் கட்டி தொலை பேசியாய் விளையாண்டது போல நூலைஎல்லா சடங்குகளிலும் உபயோக படுத்தியுள்ளனர்.

கோயில் விழாக்களில் யாகம் செய்யும் இடத்தில் பார்த்தால் கும்பத்தில் / கலசத்தில் நூல் சுற்றி இருக்கும்.
யாக சாலையின் அக்னி குண்டத்திற்கும், தெய்வ சிலையின் மைய பகுதிக்கும் இணைத்து ஒரு நூலையும் பார்த்து இருப்பீர்கள்.யாகம் செய்பவர்களின் கைகளில் நூல் காப்பு கட்டப் பட்டிருக்கும்.நூல் ஆனது தகவல் மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கும் துணை ஆக உள்ளது என்பது இதன் அபிப்ராயம்.

திருமணத்தில் தாலி கூட நூலினால் ஆனது தான்.
இடுப்பில் அணியும் அரை ஞான கயிறும் நூலினால் ஆனது தான்.

இதனால் என்னவோ நாம் படிக்கும் செய்தி தொகுப்பு புத்தகங்களை "நூல்" என்றே கூறுகிறோம் என தோன்றுகிறது.நூலை போல தாமரையும் தெய்வ சம்பந்த நிகழ்சிகளில் காணலாம். இது மகாலெட்சுமியின் அங்கமாகவும் கருத படுகிறது.
தாமரைத் தண்டின் நார் தான் நூலாக உபயோகத்தில் இருந்தது.விளக்கில் திரியாகவும் பயன் படுத்தி இருந்தனர்.எனவே பூ + நூல் என்பது பூணூலாக வந்திருக்கிறது என கூறப்படுகின்றது.பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்றும் அர்த்தம்சொல்லப்படுகின்றது.

வாரியாரும் இதற்கு ஒரு விள்க்கம் சொல்லியிருக்கிறார்.புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.

அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமேபடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே
அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் ,
க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் ,
வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
மட்டுமே குருகுலம் சென்று படித்தனர்.
அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர்.

முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.
காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர்.இந்த விளக்கமும் ஏற்றுகொள்ளகூடியதாகவே இருக்கிறது.