வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்

விஸ்வரூபம்



என் இனிய நண்பர்களே நேற்று கமல்ஹாசன் தயாரித்து எழுதி  இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படம் பார்த்தேன்

நண்பர்களோடு நேற்று இரவு காட்சி பார்த்தேன்

தயாரிப்பாளராக கமல் ரெம்பவே கஷ்டபட்டிருக்கிறார்.

முதலில் படம் துவங்கும்போதே தனது சலங்கைஒலியினை சரியாக ஒலித்து நடனத்தால் கமல்  இன்னும் நான் சளைக்கவில்லை  என்று நிரூபித்து  இருக்கிறார். தனது தொற்றத்தினை  மாற்றி மாற்றி நடிக்கும் பொது தனக்கே உரித்தான கலையினை சரியாக  வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகராக  எப்போதும் போல தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

 

இயக்குனராக கமல் இந்த விஸ்வரூபதால். எங்கயோ எட்டமுடியாத உயரத்தில் வெற்றிக்கொடி  நட்டிருக்கிறார்.

படப்பிடிப்பு  களத்தினை தேர்வு செய்வதற்கே அவர் நிறைய சிரமபட்டிருக்க வேண்டும். அத்தைனையும் நேர்த்தி.

கேமரா கோணங்களும் படப்பிடிப்பும் ஒலி, ஒளி பதிவும் அருமை.

கதாசிரியர் கமலஹாசனுக்குதான் சோதனைமேல் சோதனை போதுமடா  சாமி என்றாகிவிட்டது. தேர்வு செய்த கதை கரு எல்லாமே நமது உலக நன்மைகானது மற்றும் உலக அமைதிக்கானது தானே தவிர படத்தில் எந்த ஒரு மதத்தினையும் இனத்தினையும் எந்த ஒரு சமூகத்தினையும் இழிவு படுத்த முற்படவில்லை கமல்.

கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு மாபெரும் உயரத்திற்கு  இந்திய சினிமாவினை கொண்டு சென்று இருக்கிறார்.


கமல் இறை சிந்தனை நிறையவே செய்து இருக்கிறார்.


எம்மததவரும் சம்மதத்தோடு பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய படம் விஸ்வரூபம்.

ஒவ்வொரு இந்தியனும் பெருமை படும் விதமாக இருக்கிறது விஸ்வரூபத்தில் அனைத்து  அம்சங்களும்.



உலகநாகன் கமலே அன்றி வேறு யாரும் இல்லை...

படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்லாமல் படம் பார்க்க சொல்லுங்கள் அப்போது தான் அவர்களுக்கு படத்தின் தரம் தெரியும்.

வாழ்க வையகம்
வாழிய பாரத மணித்திருநாடு.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக