பூணூல் என்றால் என்ன?;
-------------------------- -------------
![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/539565_501033719938405_1511974542_n.jpg)
பூணூல் என்பதற்கு, பூ+நூல் என்றும்,பூண்+நூல் என்றும் சான்றோர்கள் கூறுகிறார்கள்.நம் சமயத்தில் நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
நூல் ஒரு தகவல் சம்பந்தமானது. நாம் சிறு வயதில் தீப்பெட்டியை நூலில் கட்டி தொலை பேசியாய் விளையாண்டது போல நூலைஎல்லா சடங்குகளிலும் உபயோக படுத்தியுள்ளனர்.
கோயில் விழாக்களில் யாகம் செய்யும் இடத்தில் பார்த்தால் கும்பத்தில் / கலசத்தில் நூல் சுற்றி இருக்கும்.
யாக சாலையின் அக்னி குண்டத்திற்கும், தெய்வ சிலையின் மைய பகுதிக்கும் இணைத்து ஒரு நூலையும் பார்த்து இருப்பீர்கள்.யாகம் செய்பவர்களின் கைகளில் நூல் காப்பு கட்டப் பட்டிருக்கும்.நூல் ஆனது தகவல் மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கும் துணை ஆக உள்ளது என்பது இதன் அபிப்ராயம்.
திருமணத்தில் தாலி கூட நூலினால் ஆனது தான்.
இடுப்பில் அணியும் அரை ஞான கயிறும் நூலினால் ஆனது தான்.
இதனால் என்னவோ நாம் படிக்கும் செய்தி தொகுப்பு புத்தகங்களை "நூல்" என்றே கூறுகிறோம் என தோன்றுகிறது.நூலை போல தாமரையும் தெய்வ சம்பந்த நிகழ்சிகளில் காணலாம். இது மகாலெட்சுமியின் அங்கமாகவும் கருத படுகிறது.
தாமரைத் தண்டின் நார் தான் நூலாக உபயோகத்தில் இருந்தது.விளக்கில் திரியாகவும் பயன் படுத்தி இருந்தனர்.எனவே பூ + நூல் என்பது பூணூலாக வந்திருக்கிறது என கூறப்படுகின்றது.பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்றும் அர்த்தம்சொல்லப்படுகின்றது.
வாரியாரும் இதற்கு ஒரு விள்க்கம் சொல்லியிருக்கிறார்.புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.
அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமேபடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே
அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் ,
க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் ,
வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
மட்டுமே குருகுலம் சென்று படித்தனர்.
அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர்.
முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.
காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர்.இந்த விளக்கமும் ஏற்றுகொள்ளகூடியதாகவே இருக்கிறது.
--------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக