பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!! தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட . மைதா எப்படி தயாரிகிறார்கள் ? நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா . Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது . இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது . இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் . இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது. Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன . மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம். நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் |
சனி, 28 ஜனவரி, 2012
விழித்து கொள்வோம் பரோட்டாவை புறம் தள்ளுவோம்
சனி, 21 ஜனவரி, 2012
பென்னிகுக் THE REAL HERO
விவசாயிகள் இன்றைக்கும் தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு இப்படி பலவிதங்களில் நினைக்கும் அந்த பெரியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் இன்னும் ஆச் சரியம் அதிகரிக்கும்.
ஆம்... அவர்தான் பென்னிகுக்
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரளா அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர்.
இங்கிலாந்தில் 1841ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம்ந்தேதி பிறந்த ஜான் பென்னிகுக், பொறியாளர் படிப்பு முடித்த கையோடு பொதுப்பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, அன்றைக்கு நம்மை ஆண்டுகொண்டு இருந்த ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்து , அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து திருப்பிவிடுவதற்காக கட்டப்பட்டதுதான் முல்லை பெரியாறு அணையாகும்.
அடர்ந்த காட்டுக்குள் அட்டை பூச்சி உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளின் கடி, புலி உள்ளிட்ட பல கொடிய மிருகங்களின் தாக்குதல், எப்போதும் பெய்யும் அடைமழை, மின்சாரமின்மை, உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகளை சுமந்து கொண்டு உயிரை பணயம் வைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் 1887ம்ஆண்டு அணை கட்டும் முயற்சி துவங்கியது.
அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பெய்த பேய்மழையால், பெருகிவந்த வெள்ளத்தால் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்கு மேல் பணம் ஒதுக்கமுடியாது, ஆகவே அணை கட்டும் முயற்சியை கைவிட்டு திரும்ப வருமாறு ஆங்கிலேயே அரசு பென்னி குக்கிற்கு உத்திரவிட்டது.
தனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, அணைகட்டுவதற்கு பெருந்துணையாக இருந்து, புலிகளுக்கும், கொடிய விஷப்பூச்சிகளுக்கும் உயிரைகொடுத்த, பல தமிழர்களின் கனவு திட்டமான அணை கனவாகவே போக வேண்டியதுதானா? என்று கவலைப்பட்டவர், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும், எடுத்த முயற்சியை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், அணை கட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்று தனது சொத்துக்களை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.
இரண்டாவது முயற்சியின் போது இன்னும் பலர் இறந்தனர், பலர் நோய்வாய்ப்பட்டனர் ஆனாலும் எதற்கும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் போராடி அன்றைய நவீன தொழில் நுட்பத்தின்படி அணை கட்டி முடிக்கப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில் தண்ணீர் கடல் போல தேக்கிவைக்கப்பட்டது. பென்னிகுக் துவங்கி தென்தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில் சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடத்திற்கு ஒரு ஓப்பந்தம் போடப்பட்டது. வீணாகப்போகும் மழைநீருக்கு ஒரு கப்பத் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும் தென்தமிழக மக்களுக்குதான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு என்பது பசுமை வெளியாகிவிட்டது. எப்போதும் முப்போகம்தான்.உயிர்களுக்கு
அடுத்தவர் ஆனந்தப்பட்டால் பொறுக்காத இந்த பொல்லாத உலகத்தில் கேரளா மட்டும் விதவிலக்கா என்ன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. அதற்கு பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு பொய்க்காரணங்களை காட்டி அணையின் நீர்மட்டத்தை படிப்படியாக குறைத்து. இன்றைக்கு அணையே இருக்கக்கூடாது என்ற நிலையை எடுத்துள்ளது.
இந்த அணை மட்டும் இல்லை என்றால் வானம் பார்த்து விதைத்து வாழும் தென் தமிழக விவசாய மக்களின் வாழ்க்கையை நினைத்தே பார்க்கமுடியவில்லை.
தமிழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும்.உயிராலும், தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும் மனிதநேயத்துடன் தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங்கருணையிலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பெருஞ்செல்வமாக கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லைபெரியாறு அணையை இப்போது போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு வித்திட்ட பென்னி குக்கின் பிறந்த நாளான வருகின்ற 15 /01/12ம் தேதி தென்மாவட்ட மக்கள் என்று இல்லை மொத்த தமிழகமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சந்தோஷமே.
புதன், 18 ஜனவரி, 2012
திரு சகாயம் IAS The Real Hero
ஞாயிறு, 8 ஜனவரி, 2012
http://www.addthis.com/bookmark.php
மதுரைமாவட்டம் மேலூரில்சாலை பாதுகாப்பு வார விழா
மேலூர், ஜன. - 9 - மதுரை மாவட்டம் மேலூரில் போக்குவரத்து காவல் துறை மற்றும் மனித உரிமைகள் கழகம் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தியது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிக்கு மேலூர் தாசில்தார் மோகனா தலைமை வகித்தார். மேலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம், போக்குவரத்து துறை ஆய்வாளர் சக்திவேல், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பாலசந்தர், மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பு சபரிராஜ், ராஜபாண்டியன், மீனாட்சி சுந்தரம் மற்றும் பாரத சாரண இயக்கம் ராமானுஜம் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர். பேரணி மேலூர் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி பஸ் நிலையம் வந்தடைந்தது. பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். எஸ்.ஐ. பாலமுருகன் முன்னிலை வகித்தார். எஸ்.ஐ. புகழேந்தி வரவேற்றார். கூட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் காண்பிக்கப்பட்டது. கூட்டத்திற்கு காவல் துறையினரும், போக்குவரத்து துறையினரும், மனித உரிமை கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.