ஞாயிறு, 30 டிசம்பர், 2012

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்



ஜோதிர்லிங்கங்கள்- 12/12. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்.

ஜோதிர்லிங்கங்கள்: 12/12:: 12 . அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் மூலவர்...............: ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர். அம்மன்/தாயார்: பர்வத வர்த்தினி, மலை வளர்காதலி. தீர்த்தம்: கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே ௨௨ தீர்த்தங்களும். ( வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவி பட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் இடங்களில் உள்ளன.) பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர்: ராமேஸ்வரம், மாவட்டம்: ராமநாதபுரம், மாநிலம்: தமிழ்நாடு ----------------------------------- இருப்பிடம் : மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமேஸ்வரம் அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை தங்கும் வசதி : ராமேஸ்வரம் ஓட்டல் தமிழ்நாடு போன்:+91-4573 - 221277 , 221064. ஓட்டல் ராயல் பார்க் போன்:+91-4573 - 221680 , 221321. ஓட்டல் மகாராஜாஸ் ஏ/சி போன்:+91-4573-221271, 221721,222511. ஓட்டல் சண்முகா பாரடைஸ் ஏ/சி போன்:+91-4573-222984, 222945. ஓட்டல் ஐலண்ட் ஸ்டார் போன்:+91-4573-221472, கோசுவாமி மடம் தங்கும் விடுதி. போன்: +91-4573 221108, 222419. --------------------------------------- பதிகப் பாடல்களைப் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம்: கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் தரும் முற்றித் திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவில் சுழல்கின் றேன் தூய்மையின்றி உடலிடை நின்றுப் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே. –திருநாவுக்கரசர். தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 8வது தலம். ---------------------------------------- தல சிறப்பு: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். 1212 தூண்கள், 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது. அம்மனின் சக்தி பீடங்களில் இது சேது பீடமாகும். மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர். ------------------------------------------ திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் - 623 526, ராமநாதபுரம் மாவட்டம். தொலைபேசி எண்: +91-4573 - 221 223. -------------------------------------- பொது தகவல்: பிரகாரத்தில் சீதை, மணலில் லிங்கம் பிடிக்க, அதற்கு ராமர் பூஜை செய்யும் காட்சி சிலையாக வடிக்கப் பட்டுள்ளது. அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் உள்ளிட்ட வானர வீரர்களும் இருக்கின்றனர். மேலும் நளன், நீலன், கவனால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளும் இப்பிரகாரத்தில் உள்ளன. சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங் களுக்கு மத்தியில் சரஸ்வதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். ------------------------------------ பிரார்த்தனையும், நேர்த்திக் கடனும்: இரட்டை விநாயகரை குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் வேண்டிக்கொள்கின்றனர். நாகதோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள், அக்னி தீர்த்தக்கரையில் நாகர் பிரதிஷ்டை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். ------------------------------------ தல பெருமை: காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக் கொடுக்கலாம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்: புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். "மகாளயம்' என்றால் "கூட்டமாக பூமிக்கு வருதல்' எனப்பொருள். இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில். ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, "விஸ்வநாதர்' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது. கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது. உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாத போது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். அக்னி தீர்த்தம் பெயர் ஏன்? : ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு. காலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமி யையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர். தீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது. தீர்த்தமும் பலனும்: 1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம் 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி) 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி) 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம், 10.கவய தீர்த்தம், 11.கவாட்ச தீர்த்தம், 12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல். 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு "பாதாள பைரவர்' என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது. சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. காவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர். பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார். விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. மூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப் பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், "சேதுபீடம்' ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். 12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம். விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,""அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார். தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,'' என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார். தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு "கோதண்டராமர்' என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான். அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர். ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும். வால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம். சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், "ராமர் பாதம்' இருக்கிறது. பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர். கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாத சுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள். தல வரலாறு: சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் "ராமநாதசுவாமி' என்ற திருநாமம் அமைந்தது. ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக் கிறார்.அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும். விஞ்ஞானம் அடிப்படையில்: 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது. 

வெள்ளி, 28 டிசம்பர், 2012

அன்பான வேண்டுகோள் 






எனது அன்பு சகோதரரும் இனிய நண்பருமான சுசீந்திரன் அவர்களது தகப்பனார் அவர்கள் தற்போது உடல் நலமின்றி இருக்கிறார். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் சுசீந்திரன் அவர்களது முகம் வாடி இருப்பதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நண்பரின் தகப்பனார் உடல் நலம் பெற நண்பர்கள் யாவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு தங்களை வேண்டுகிறேன்

எல்லாம் வல்ல அந்த இறைவன் உடல் நலமில்லாத திரு. வேலுசாமி அவர்களுக்கு விரைவில் நமது வேண்டுதல் மூலமாக பூரண நலம் அருள்வார் என்று  நம்புகிறேன்.


செவ்வாய், 25 டிசம்பர், 2012

வரப்புயர;

வரப்புயர;
-------------



பெண்கவி ஔவையார் மிகவும் மதிநுட்பம் மிக்கவர்.தன்னலம் கருதாமல் சேவை செய்யக்கூடியவர்.சோழர்கால அரசர்களுக்கு ஔவையாரை ரொம்பபிடிக்கும்.அரசு விழாக்களில் பங்கேற்க எப்பொழுதும் ஔவையாருக்கு தனி அழைப்பு வந்துவிடும்.

குலோத்துங்க மன்னன் முடிசூட்டுவிழாவில் ஔவையாரும் பங்கேற்றார்.பல அமச்சர்களும்,புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர்.அப்பொழுது ஔவையார் மன்னனை வாழ்த்தி பாட எழுந்தார்.மன்னரும்,அவையோரும் ஔவயார் என்ன வாழ்த்தி பாடப்போகிறர் என ஆவலுடன் பார்த்துகொண்டிருந்தனர்.அப்பொது ஔவையார்"வரப்புயர"எனச்சொல்லி விட்டு அமர்ந்துவிட்டார்.

இதனைகேட்ட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.ஔவையாரே எழுந்து இதற்கு பின் வருமாறு விளக்கம் கூறினார்.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

ஆனால் இப்பொழுது இருக்கும் விவாசாயிகளின் நிலைமையும்,அராசாங்கத்தின் கொள்கையும் எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது.விவசாய பொருட்களுக்கு கட்டுபடியான விலை எந்த அரசும் நிர்ணயிக்கவில்லை மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டதால் விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயம் நலிவடைந்துவருகிறது.விவசாயத்தின் நலிவடைந்த தன்மையும்,விவசாயிகளின் கடன் தொல்லையும்,ரியல் எஸ்டேட் காரகளுக்கும்,ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அராசியல்வாதிகளுக்கும் தான் ஊக்கத்தை தருகிற்து.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

காமராஜ்

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.


ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

How to Give a Foot Reflexology

How to Give a Foot Reflexology

பழனியின் அன்றைய அரிய புகைப்படம்...! —

பழனியின் அன்றைய அரிய புகைப்படம்...! — 


உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் மாயன் ஆண்டுக்குறிப்பேடு..!!!!

திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்

திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழானெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.

நீண்ட சடையும் உலகம் முழுதும் போர்த்த புகழை உடைய சிவபெருமானின் திருவடி சரணம் அடைந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் அருள்புரியும் சிவபெருமானை அடையும் திருநெறியை பின்பற்றலாமே! கூடலாமே!



2012 வரை மாயன் காலண்டர் .பிறகு ஓரியோ காலண்டர்.
 

சிவனே என்றிரு


சிவனே என்றிரு என்பதன் பொருள் தெரியுமா?

சிவனேனு இரு என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?.. சிந்தனையை ஒருமுகப்படுத்தி இறைநினைப்பில் இருக்க வேண்டும் என்பதையே சிவனே என்றிரு என்று பெரியவர்கள் குறிப்பிட்டனர். 
திருமந்திரத்தில் திருமூலர், சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்கிறார்.
அவ்வையார், சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

திருப்பாவை - 5


மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்
என்றும் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
--------------------------------------------------------------------------------
நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக் கூடாது. பிறர் கூறும் நல்ல கருத்துக்களை கேட்க வேண்டும்.பிறர் நம்மை நம்பும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும். மனதில் சாந்தி இருக்கும் பொழுது தான் ஆனந்தம் ஏற்படுகிறது. பணம் இருந்தும் அடக்கமாய் இருப்பவன் உயர்ந்தவன். பலம் இருந்தும் பொறுமையாய் இருப்பவன் வீரன். அடிக்கடி கோபம் கொள்ளாதீர்கள். ஏனெனில் கோப உணர்ச்சி கல்லீரலைப் பாதிக்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. எதற்கெடுத்தாலும் பயப்படாதீர்கள். ஏனெனில் பய உணர்ச்சி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது. நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது.

எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மனதை ஒருநிலைபடுத்தி இறைவனை நினைத்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அமைதியாய், தெளிவாய், நிதானித்து பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்து விடுகிறது.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உடல் புத்துணர்ச்சிக்கு இஞ்சி அவசியம்.....!




உடல் புத்துணர்ச்சிக்கு இஞ்சி அவசியம்.....!

இஞ்சி உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறப்பு சமையல் பொருளாக இருக்கிறது. நம் அன்றாடம் உண்ணும் உணவை காரத்தன்மையுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் இஞ்சியை தினமும் இரண்டு ஸ்பூன் சாறாக சாப்பிடுவது அவசியம்.

இஞ்சி மருத்துவம்

இஞ்சி சமையலுக்கு மட்டுமே பிரபலமானது அல்ல, இஞ்சியை ஒரு நாளில் ஒரு எண்ணிக்கை என தினமும் சாப்பிடக்கூடிய இயற்கை மருந்தாக கருதப்படுகிறது?

காலை நோய் மற்றும் எரிச்சல்

இஞ்சி டீ குடிப்பது காலை நோயை சமாளிக்க சிறந்த வழி. குறிப்பாக கர்ப்ப காலத்தில், கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். மாறாக வெறுமனே காலை நோயை போக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சேர்த்து சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் பெற, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். இஞ்சி டீ குடிக்க விரும்பாதவர்கள் மாற்றுவழியாக காலை நோயை சமாளிக்க சாதாரண டீ உடன் இஞ்சி பிஸ்கட் சாப்பிடலாம். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திலிருந்து விடுதலை பெற ஒரு சிறிய இஞ்சி துண்டுகளை வெறுமனே சாப்பிடலாம்.

மூட்டுவலிகள் மற்றும் வீக்கம்

மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் உடனடி மருந்தாக இஞ்சி டீ சாப்பிடலாம். இஞ்சி மாதவிடாய் பிடிப்புகளுக்கு ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக கருதப்படுகிறது.

தொண்டை புண், குளிர் மற்றும் காய்ச்சல்

குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா

வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா நிவாரணம் பெறும்.
 

கணபதி ஸ்தபதி



133 அடி உயரமுள்ள {38அடி பீடம்,95அடி உயர சிலை}
திருவள்ளுவர் சிலையை வடிவமைத்த சிற்பி 
கணபதி ஸ்தபதி

ஸ்ரீ காளிகாம்பாள்


மண்ணடியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவ
ில் சுமார் 400 வருட பழம் பெருமை உடையது.

1639ஆம் ஆண்டுக்கு முன்பே விஸ்வகர்மா குலத்தினரால், இவ்வாலயம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஸ்வகர்மாக்கள் கோட்டையில் வைத்து வழிபட்டதால் இதற்குக் கோட்டையம்மன் என்ற பெயரும், முன்பு இக்கோவில் கடல் ஓரத்தில் அமைந்திருந்தாகவும், அங்கு செம்படவர்கள் அன்னையை செந்தூரம் பூசி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும் அம்பாளுக்கு இருக்கிறது. சென்னியம்மன் குப்பமே, பின்னர் சென்னை என்றாயிற்று என்றுகூடச் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடற்கரையருகே அமைந்திருந்த இக்கோவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்போது கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

காளிகாம்பாள் கோவில் சரித்திரப் பிரசித்தி பெற்றது. 1667ஆம் ஆண்டு, மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜி, ஒரு பெரும் போருக்குப் போகும் முன், இக்கோவிலுக்கு வந்து, அம்மன் சிலையின் முன்பு தன் வாளை வைத்து வணங்கியிருக்கிறார். பின் அப்போருக்குச் சென்றவர், பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில், பணி புரிந்துகொண்டிருந்தபோது பிராட்வேயில் தங்கியிருந்தார். அப்போது அடிக்கடி இக்கோவிலுக்கு வழிபட வருவாராம். ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற அவரது பாடல் இந்தக் கோவிலில் உள்ள காளிகாம்பாளைப் பற்றிப் புனையப்பட்ட பாடல்தான்.

வானொலி−யின் தந்தை ஒரு இந்தியர்

வானொலி−யின் தந்தை ஒரு இந்தியர்

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு. 
வானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.
அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல. 
கிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார். சுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே
கொல்கத்தாவில்தான்.
மேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
ரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளை சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.
செடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார். 
வானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.
1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார். 
போஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார். 
மே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.
அதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளை காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர்
என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.
இதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. 
அமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும். அதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம்.

தினசரி வாழ்க்கைக்கு வேண்டிய சில ஆன்மீகக்குறிப்புகள்



தினசரி வாழ்க்கைக்கு வேண்டிய சில ஆன்மீகக்குறிப்புகள்

· சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உட
லுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
· வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.
· இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா குலத்தில் அவதரித்தார்.
· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
· நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா?
· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும் விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

உல்லாச பறவை



21-12-2012 க்கு உலகம் அழிந்து விடும்....என்பதை இன்னும் 1000 வருடத்திற்கு தள்ளி வைத்து விட்டோம்.....அதனால் நாம் எல்லாம் உல்லாச பறவையாக பறக்கலாம்......நண்பர்களே...... 

திங்கள், 17 டிசம்பர், 2012

இன்று எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி அவர்களின் பிறந்த நாள் , இவர் செப்டம்பர் 16- 1916 அன்று பிறந்தார். 

இவர் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த
 விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.



Today is M.S. Subbulakshmi's Birthday.

Madurai Shanmukhavadivu Subbulakshmi , also known as M.S., was a renowned Carnatic vocalist. She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honor.She is the first Indian musician to receive the Ramon Magsaysay award, Asia's highest civilian award, in 1974 with the citation reading "Exacting purists acknowledge Srimati M. S. Subbulakshmi as the leading exponent of classical and semi-classical songs in the Karnataka tradition of South India."

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஒம் நம சிவாய நம ஒம்

ஒம் நம சிவாய நம  ஒம்

ஸ்ரீ மகாபெரியவா


ஸ்ரீ கும்பகோணத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம், ஸ்ரீ மகாபெரியவா பிரம்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய வித்வான்களும் சன்யாசிகளு
ம் கேட்டு பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வித்வான் இடையில் ஒரு சந்தேகம் கேட்டார். ஸ்ரீ பெரியவா அதற்கான பதிலை சுமார் ஐந்து நிமிடங்கள் சுருக்கமாக விவரித்தார். பின் தான் சொன்னதற்கு ஆதாரமாக காண்பிக்க சில நூல்களின் பெயர்களை சொன்னார்.

" பாமதி என்ற புத்தகத்திலோ ' பரிமள" த்திலோ இதற்கு விஸ்தாரமான பதில் இருக்கு. அதைப் படிச்சா போதும்....... மடத்து லைப்ரரியிலே அந்த புஸ்தகம் இருக்குமே பார்த்துடலாமே " என்றார்.

புத்தகசாலைக்கு பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் உடனே " அந்த புஸ்தகத்தை யாரோ எடுத்துண்டு போயிருக்கா .... இப்போ லைப்ரரியிலே இல்லே " என்றார்.

அப்போது தெருவில் ஒரு பேரிச்சம்பழம் விற்பவன் குரல் கொடுத்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான். அவன் பழைய புத்தகங்களுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பவன்.

" பழைய புஸ்தகங்களை போட்டுட்டு சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா " என்று ஸ்ரீ பெரியவா அப்போது கூறினார். ஏதோ அவன் பிழைப்பைப்பற்றி கூறுகிறார் என்று நினைத்த பண்டிதர்களுக்கு ஸ்ரீ பெரியவா அந்த பேரிச்சப்பழம், காரன்கிட்டே அவன் வெச்சிண்டு இருக்கின்ற புஸ்தகத்தையெல்லாம் விலை பேசி வாங்கிண்டு வா " என்று தொண்டரிடம் கூறியபோது வேடிக்கை செய்கிறாரோ என்றிருந்தது.

எதற்கு இப்படி ஒரு கட்டளையை பிறக்கிறார் என்று புரியாது நின்றனர். மடத்து சிப்பந்தி போய் அத்தனை புத்தகங்களையும் ஒரு கட்டாய் வாங்கிவந்தார்.

முதல் அதிசயமாக அவை அனைத்தும் தமிழோ ஆங்கில புத்தகங்களோ அல்ல ! எலாம் சமஸ்கிரத புத்தகங்கள் அத்தனையும் பக்கங்கள் பழுப்படைந்து மிக பழயபுத்தகங்கள் அபூர்வமான புத்தகங்கள்.

" என்னென்ன புத்தகங்கள் இருக்குன்னு பாருங்க" என்றார். ஸ்ரீ பெரியவா ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பெயரை படித்துக்கொண்டே வந்தனர். இரண்டாவது பேரதிசயமாக அந்த புத்தககட்டின் நடுவே ஸ்ரீ பெரியவா கேட்ட ' பாமதி ' யும் ' பரிமள ' மும் இருந்தன. அந்த அத்வைத விளக்க நூல்கள், அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நம்மை தேடுவாரென்று தெரிந்து பேரிச்சம்பழக்காரனுடன் வந்திருக்குமோ ?

பதில் கிடைக்காத இது போன்ற அபூர்வமான அதிசயங்களில் லேசாக தன்னை தெய்வமென்று காட்டியருளிய கருணை தெய்வம், தன்னை சரண்புகுந்தோரை என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களோடும் சர்வ மங்களங்களோடும் இன்பமாக வாழவைக்கும் என்பது சத்தியம் !

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!
Like ·  ·  · 4 minutes ago · 

மார்கழி



மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.

காஞ்சி மஹா பெரியவர் : -

காஞ்சி மஹா பெரியவர் : -


" துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான
நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள் 

நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய
வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும்
திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும்.
அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும்.
ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே
ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான்,
நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக்
கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும்
ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல்
இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."

-காஞ்சி மகான், காஞ்சிப் பெரியவர்

சனி, 15 டிசம்பர், 2012


ஒரே எண்ணில் நாள், மாதம், ஆண்டு இனி எங்கள் வாழ்நாளில் வராது. மீண்டும் இதே எண்ணுடன் கூடிய நாள், மாதம், ஆண்டு வர அண்ணளவாக 100 ஆண்டுகள் ஆகும்.

12/12/12 would be the last Day, Month & Year with the same number for almost another 100 years. We will not see another date with same sequence in our lifespan.
 
10.12.2012

சர்வதேச மனித உரிமைகள் தின நல வாழ்த்துக்கள் நண்பர்களே

உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அணி திரள்வோம் முகநூல் வழியாகவும் மனித உரிமை மீறல்களை தடுக்க பிரச்சாரம் செய்வோம் நண்பர்களே.......

மனித உரிமைகள் காப்போம்
மனித உரிமை மீறல்களை தடுப்போம்................

shirdi sai baba rare photo









"ஓம்
கிரியா பாபாஜி நமஓம் "
இயற்பெயர் : நாகராஜ்
அகத்திய முனிவர் மற்றும்
ஆஞ்சநேயர் போல் ,பாபாஜியும்
ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக
வாழ்கிறார். உலகமெங்கும்
சென்று அருள்
மழை பொழிந்து கொண்டு
இருப்பவர்.பல
ஞானிகளை உருவாக்கியவர்.
சித்தர் போகரின் அருமந்த சீடர் !
அஷ்டமா சித்திகளை பெற்றவர்.
பாபாஜி, போகரிடம் சிஷ்யராக,
பல யோக சாதனைகளை, தியான
கிரியைகளை பழகினார். பின்
முருகப்பெருமானின் தரிசனம்
பெற்றார்.
பொதிகை மலையில்
அகத்தியரை நினைத்து கடும்
தவம் இயற்றினார். அவர்
காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த
போதிலும், மனம் தளராமல்
அகத்தியரின்
பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.
பின்பு அகத்தியர் காட்சி தந்து ,
பாபாஜிக்கு கிரியா,
குண்டலினி, பிராணயாம
தீட்சையை அளித்து ,
பாபாவை பத்ரிநாத்துக்கு
செல்லுமாறு பணித்தார். உலகம்
அதுவரை அறிந்திராத
ஒரு மாபெரும் சித்தராக
பாபாஜி உருவாவதற்கு அன்று
அகத்தியர்தான் அடித்தளம்
அமைத்தார்.
இமய மலை தொடரில் உள்ள
சஞ்சீவி மலையில்,
பாபாஜி கடும்தவம்
செய்து "சொரூப சமாதி"
அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம்
அவரை சூழ்ந்து அமைந்தது.
அவரது உடல் முதுமை,
பிணி ஆகியவற்றில்
இருந்து கடவுளின் அருளால்
அறவே விடுபட்டது.
ஜீவாத்மாவின் கருவியாக,
பாபாஜி ஒரு சித்தராக,
அரூபியாக மாறினார். அன்றில்
இருந்து மக்களுக்கு இல்லறத்தில்
இருந்து கொண்டே கிரியா
யோகத்தை கற்று யோகிகளாக வாழ,
வழிமுறை செய்தார்.
கிரியா யோகத்தின்
ஒளி விளக்காக
மகா அவதார்
பாபாஜி திகழ்கிறார்.
பாபாஜி, மீண்டும்
கிரியா யோகத்தை புத்துணர்ச்சி
பெறசெய்து , பல தவ புருஷர்களான
ஆதி சங்கரர், கபீர் தாஸ்,
லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர்,
பரமஹம்ச யோகாநந்தர் மூலமாக
இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும்
கிரியா யோகத்தைக்
கற்று முக்தி நிலையை அடைய
க்ரியா யோகத்தை கற்று தந்தார்.
க்ரியா யோகம் : க்ரியா யோக
பயிற்சியை தகுந்த குருவின்
மூலமாக தீவிரமாக செய்தால், அவர்
தனது பிறப்பு, இறப்பு கர்ம
வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக
நிலையை சீக்கிரமாக அடைய
முடியும்.
அரை நிமிடம் செய்யும்
ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு -
இறப்பு ஜென்மத்திற்கு சமமான
கர்மவினைகளை குறைக்கும்.
எட்டரை மணி நேர
கிரியா பயிற்சி, ஆயிரம் வருட
பிறப்பு - இறப்பு ஜென்ம
கர்மவினைகளை குறைக்கும்
பாபாஜி கூறுகிறார் :
" நீ ஒரு அடி தூரம்
என்னை நோக்கி வந்தால், நான்
பத்தடி எடுத்து வைத்து
உன்னிடம் வருகிறேன்."
 

வெள்ளி, 7 டிசம்பர், 2012










டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினம் உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மனிதப் படுகொலைகள், மனித உரிமை
மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம். அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது. உறுப்புரை – 01 இல் ‘மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?

ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால அந்நியர் ஆட்சி முதல் இன்றைய ஜனநாயக ஆட்சி வரை மனித உரிமைகளுக்கு பூரண முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் பெரும்பான்மை ஆட்சியே அந்நாள் முதற்கொண்டு நடைபெற்று வருவதால், அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.

அதாவது, ‘சிறுபான்மையினருக்கு உரிமைகள்” என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் போது பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்த் தலைவர்களால் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அக்காலப்பகுதியில் சிறுபான்மையினருக்கென பல விசேட ஷரத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதோ ஓர் அதிகாரத்துக்கு உட்பட்டதாக காணப்பட்டதால் அதன் பூரண பயன்பாட்டை சிறுபான்மையினர் அனுபவிக்கவில்லை. இது போன்றே இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் எனும் போதும் தமிழ், முஸ்லிம், பறங்கியர் அடங்குகின்றனர். இவர்களின் உரிமைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன.

30 வருட கால போர்ச்சூழல் மறைந்து, நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, கொழும்பில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றால் நம் நாட்டு மனித உரிமையை என்னென்பது?

இதே நிலையில் தான் நம் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை 13இல் கூறப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஆனால், நம் நாட்டில் நடப்பதென்ன?

அண்மைக் காலமாக நாட்டில் மீண்டும் உருவெடுத்துள்ள வெள்ளை வேன் கடத்தல், மர்ம மனிதத் தாக்குதல், மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்ற சம்பவங்கள் மேற்கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தையே கேலிக்குரியதாக்குகின்றனவே?

உரிமைகள் ஏட்டளவில் தான். நடைமுறையில் எதையும் காணோம். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இடத்துக்கிடம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து, சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு மாநகரில் கூட இத்தகைய வெள்ளை வேன் ஆயுததாரிகளால் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது.

இதன் மூலம் ஒரு பிரஜை நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அவனது உரிமை மீறப்படுகின்றது என்பதுதானே அர்த்தமாகின்றது?

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா?
 

மனித உரிமைகள் கழக 12 வது தேசிய மாநாடு


மனித உரிமைகள் கழக 12 வது தேசிய மாநாடு


ஞாயிறு, 2 டிசம்பர், 2012













அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி

அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை ...... வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ

டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா

மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி

பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
 




பொய்யின்றி மெய்யோடு 
நெய் கொண்டு போனால்...

ஐயனை நாம் காணலாம்!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மதுரை ....-கவிஞர்.வைரமுத்து







மதுரை


பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகைமார்தம்
மெல்லடியும்
மயங்கி ஒலித்த
மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்
பூமதுரை

நீண்டு கிடக்கும் வீதிகளும்
- வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும்
ஆண்ட பரம்பரைச்
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும்
காணக் கிடைக்கும்
பழமதுரை - தன்
கட்டுக் கோப்பால்
இளமதுரை

மல்லிகை மௌவல்
அரவிந்தம் - வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம்
குருக்கத்தி - இவை
கொள்ளை அடித்த
வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை -
நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை

தென்னவன்
நீதி பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால்
- அவள்
கந்தக முலையில்
எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய
தொன்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும்
தென்மதுரை

தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன்
என்றே சபதமிட்டே
அமிர்தம் பரப்பும்
வையைநதி - நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய
மாமதுரை - இது
மரபுகள்
மாறா வேல்மதுரை

மதுரை தாமரைப்
பூவென்றும் - அதன்
மலர்ந்த
இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்
- அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய
பால்மதுரை - வட
மதுரா புரியினும்
மேல்மதுரை

மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பிரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த அந்நியரும்
- அந்த
அந்நியரில்சில
கண்ணியரும்
ஆட்சிபுரிந்த
தென்மதுரை -
மீனாட்சியினால்
இது பெண்மதுரை

மண்ணைத் திருட
வந்தவரைத் - தம்
வயிற்றுப்
பசிக்கு வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிக் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய
தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய
தூய்மதுரை

அரபுநாட்டுச்
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறர்ற்றி
மரபுக்கவிதை படைத்தல்போல்
- ஒரு
மண்டபம்
திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும்
கலைமதுரை - இது
கவிதைத் தமிழின்
தலைமதுரை

வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் பாடிய
பாடல்களும்
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்சமிருக்கும்
தொன்மதுரை - தமிழ்
மெச்சி முடிக்கும்
தென்மதுரை

போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
வளையொலியும்
தொடர்ந்து கேட்கும்
எழில்மதுரை - கண்
தூங்காதிருக்கும்
தொழில்மதுரை

ஆலைகள் தொழில்கள்
புதுக்காமல் - வெறும்
அரசியல் திரைப்படம்
பெருக்கியதில்
வேலைகள் இல்லாத்
திருக்கூட்டம் - தினம்
வெட்டிப்பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள்
சூழ்மதுரை - இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை

நெஞ்சு வறண்டு போனதனால்
வையை
நேர்கோடாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர் -
நதியைப்
பட்டாப் போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த
முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும்
பதிமதுரை






-கவிஞர்.வைரமுத்து

கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!













கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி..!
டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான் !