வெள்ளி, 2 நவம்பர், 2012

உறவு, துறவு...........



விரும்பும் சிலரை நேசிப்பதே உறவு. விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் நேசிப்பது துறவு.

உடல் மனதை நேசிக்க வேண்டும் அவ்வாறு நேசிப்பதால் உடல் நோய்கள் வராது. அதே போல் மனமும் உடலை நேசிக்க வேண்டும். உடலும் மனமும் சேர்ந்து ஆன்மாவை நேசிக்க வேண்டும் அப்போதுதான் ஆன்மநேயம் வெளிப்படும். பிற உயிர்களை ஆன்மாவாக பார்க்கும் பரிபக்குவநிலை வாய்க்கும். அவர்களின் பார்வையில் இரக்கம் மட்டுமே இருக்கும். தாயன்புடனும் கருணை
யுடனும் பார்ப்பதால் குற்றங்களை அறியாமையால் ஏற்படும் மாயை என்று மன்னித்து விடுவார்கள்.

நல்ல பெற்றோர் தமது பிள்ளைகளை சமுதாயத்திற்கு காட்டி கொடுக்க மாட்டார்கள். அவர்களை நல்லவர்களாக வாழ வைக்கவே முயற்சி செய்வார்கள். அதே போல் நல்ல பிள்ளைகள் தம் பெற்றோரைச் சமுதாயத்திற்கு இழிந்தவர்களாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

அதே போல் நல்ல கணவன் மனைவி ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க கூடாது. போராட்டம் உங்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

நல்ல குரு தம் சீடர்களை காட்டிக் கொடுக்க கூடாது. நல்ல சீடர் தம் குருவைக் காட்டிக் கொள்ள கூடாது.

இது உயர்ந்த பண்புகளில் ஒன்று. ஞானிகளை தினமும் பூஜை செய்து வந்தால் இந்த உயர்ந்த பண்பு தானாகவே கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக