வியாழன், 31 ஜனவரி, 2013

நல்ல விடிவு காலம் வர வழி வகை செய்வாங்களா ?


நல்ல விடிவு காலம் வர வழி வகை செய்வாங்களா ? 






மழை பொய்த்து விவசாயம் பாழாகி இங்க எல்லோரும் செதுக்கிட்டு இருக்கிறப்ப அதுக்கு எதாவது நல்லதா யோசிச்சு நிவாரணம் பண்ணுவாங்களா ?

தடை இல்ல மின்சாரம் வழங்க எதாவது புதிய வழிமுறைகளை வகுத்து நல்லது பண்ணுவாங்களா ?

புதிய தொழிற்சாலைகள் எல்லாம் வெளி மாநிலங்களுக்கு போய்கிட்டு இருக்கு இருக்கிற தொழிற்சாலைகள் எல்லாம் தூங்கிகிட்டு இருக்கு அதுக்கு எல்லாம் நல்ல விடிவு காலம் வர வழி வகை செய்வாங்களா ?

இப்படி

தமிழக அரசுக்கு தலைக்குமேல எத்தைனையோ வேலைகள் இருக்க சினிமா படத்துக்கு தடை செய்ற வேலைக்கு இவ்ளோ மெனகெடனுமா என்ன நீங்களே   சொல்லுங்க ?

இப்படி புலம்ப விட்டுடாங்களே நண்பர்களே .................

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ங்க தோழர்களே தோழிகளே .........

புதன், 30 ஜனவரி, 2013

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல்




2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல்


(Biology)




குருவடி சரணம்
* ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள்
சுவாசிக்கின்றீர்கள்?
*உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை?
*ஆண், பெண், அலியாவது ஏன்?
*சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்
* உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு?
*சிதம்பர இரகசியம் என்றால் என்ன?

இயற்கையின் செயல்பாடுகள்

ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது(ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும். பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு நாள், பாலர் பருவம், வாலிபம், முதுமையுமாக பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு நரை, திரை வரும். உடம்பு தளர்ந்து போகும். உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துவிடும். உயிர் தோன்றும்போது உடம்பும் உயிருமான சுக்கில, சுரோணிதமாகிய திரவப்பொருளாக இருந்த இந்த உடம்பு, திடப்பொருளாக மாறி இறந்துபோகிறது. இது மிக நுட்பமான இயற்கையின் செயல்பாடாகும்.

பரிணாம வளர்ச்சியும் அதன் இயல்பும்

சடப்பொருள் நீங்கலாக மற்ற எல்லா சீவராசிகளும் அதனதன் அமைப்பின்படி பரிணாம வளர்ச்சிக்குட் பட்டிருக்கும். இதை உண்மைப்பொருள் அறிந்தவர்கள் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது. அதன் போக்கில்தான் சென்று சாகவேண்டும். ஆனால் மனிதன் மட்டும் தடுக்கவும் வெல்லவும் முடியும்.

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11
மானுடம் : 9
நீர் :10
பறவை :10
நாற்காலோர் :10
தேவர் :14
தாவரம்(4*5) : 20
******************
மொத்தம் = 84
******************

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும். மேற்கண்ட பாடலில் 7 வகை தோற்றத்தைப்பற்றி உள்ளது. இந்த ஜீவராசிகள் நான்குவகை யோனி வாயிலாக தோன்றும். குறிப்பாக கருப்பை முட்டை மற்றும் வெப்பம், வியர்வைகளால் தோன்றும்.தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்றபேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள். மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள். நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை. பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை. நாற்காலோர்(நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை.

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை. மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்குதான். புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை. செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை. கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு. மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

குறிப்பு :

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே. அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, அதை உண்ணுவதும் இயற்கையே, அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே. உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே. பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே. நாம் நமக்கு பசி வந்ததாகவோ, நாம் உண்ணுவதாகவோ நினைக்ககூடாது. பசியும் இயற்கையே, நாம் உண்ணுவதும் இயற்கையே, அறுசுவையும் இயற்கையே, உறங்குவதும் இயற்கையே, உறங்கி விழிப்பதும் இயற்கையே, உடல் இன்பமும் இயற்கையே, கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே. ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்.

தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!


ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடத்து
-திருக்குறள் 126-

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.


இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே
-திருமந்திரம் 2264, 2304-

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள் காண முடியும். ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே
(-திருமந்திரம் 479)

பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.

தொடரும்....

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய 15 நூல்கள்

*********************************************************
தமிழ் மூவாயிரமருளிய திருமூலர்

**********************************************************

ஓம்/om/ॐ/aum/ओं /唵 = அ+உ+ம்

**********************************************************
சித்தர்கள் தந்த தமிழ்

**********************************************************
தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி
**********************************************************
காணொளி: தமிழ்ச்சித்தர் கண்ட வியக்க வைக்கும் மருத்துவம்
**********************************************************
காணொளி: ஓங்காரக்குடிலும் சதுரகிரியும்
**********************************************************
கடவுளின் அணுத்துகளைத் தேடும் விஞ்ஞானம்
***********************************************************

The Tamil Siddhars are 18 enlightened men and women who wrote down the causes of 4,448 different diseases and prescribed medicines. AIDS was called `Vettai Noi`. AIDS syndrome was already known to the Siddha system of medicine.

மூன்று


                                                                                                    

Unlike · 

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்



அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்



செவ்வாய், 29 ஜனவரி, 2013

அம்மனின் 51 சக்தி பீடங்கள்



பன்னிரண்டு ஜோதிர்லிங்கன்களைக் கண்ட நாம், சக்தி பீடங்களின் விபரங்களைக் காண்போமே!

அம்மனின் 51 சக்தி பீடங்கள்
1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்

புதன், 23 ஜனவரி, 2013

அன்னை தெரேசா

அன்னை தெரேசா இளமையில் எடுத்த அறிய புகைப்படம்

மகாத்மா காந்தி அடிகள் அவர்களது சிலைக்கு கூட சுதந்திரம் இல்லையா நண்பர்களே தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்.............

Photo: மகாத்மா காந்தி அடிகள் அவர்களது சிலைக்கு கூட சுதந்திரம் இல்லையா நண்பர்களே தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்.............

திங்கள், 21 ஜனவரி, 2013

ஆண் பெண் நட்பு நீடிக்க

ஆண் பெண் நட்பு நீடிக்க 

ஆண் பெண் நட்பு என்பது சகஜமாகிவிட்ட இந்த காலத்தில் கூட ஒரு சில அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை. பொதுவாக தோழியை கைபேசியில் அழைக்கும் போது அவருக்கு எந்த நேரம் பேச வசதிப்படும் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். பேசுவதற்கு வசதிப்படுமா என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புவது நலம். போன் நம்பரை தர சொல்லி தொல்லை செய்ய வேண்டாம் . எல்லார் வீடுகளிலும் அதற்கான சூழல் இருக்காது. திருமணம் ஆன தோழியாக இருந்தால் இன்னும் கவனம் தேவை. உங்களுடைய அழைப்பை யார் ஏற்றாலும் அவரிடம் பேசுவது யார் என்று சொல்லி இன்னாருடன் பேச வேண்டும் என்று கேளுங்கள். வேறு யாரவது அழைப்பை ஏற்கும் போது தயவு செய்து அழைப்பை துண்டிதுவிடாதீர்கள். அதை விட அந்த பெண்ணுக்கு வேறு தொல்லையே வேண்டாம். என் குரலை கேட்டதும் ஏன் பேசவில்லை என்று குடும்பத்தினரின் கேள்விகளை சந்திக்க முடிவதில்லை. தோழிகளின் குடும்பத்தினரோடு நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள். chat இல் பேசும்போதும் எடுத்தவுடன் உங்கள் அன்பை எல்லாம் கொட்டாதீர்கள். ஒரு வணக்கத்துடன் ஆரம்பியுங்கள். யாரேனும் அருகில் இருந்தால் அவரே தெரியபடுத்தி விடுவார். தவறான வார்த்தைகளால் ஆரம்பித்தால் பல சமயங்களில் தர்ம சங்கடமாகி விடுகிறது.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

பெண் கல்வியின் அவசியம்


பெண் கல்வியின் அவசியம் 
இந்தியா இதுவரை மக்கள் கவலை என்று உலகின் இரண்டாவது மிக பெரிய நாடு. ஆனால் இதுவரை கல்வி விஷயத்தில் அது ஒரு பின்தங்கிய நாடு. கடந்த காலத்தில், பெண்கள் எந்த கல்வி பெறவில்லை. அவர்கள் வீடுகள் நான்கு சுவர்களுக்கு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு பணிகளில் அவர்கள் மட்டுமே கல்வி இருந்தது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நேரத்தில் சில உன்னத சமூக சிந்தனையாளர்கள் நம் நாட்டில் பெண் கல்வி தங்கள் கவனத்தை செலுத்தினார். ராஜா ராம் மோகன் ராய், Iswara சந்திர வித்யாசாகர் பெண்கள் கல்வி முக்கியத்துவம் கொடுத்து புகழ் பெற்ற சீர்திருத்தவாதிகள் இருந்தது. அவர்கள் ஒரு மிக வலுவான வாதத்தை அமைத்திருக்கிறார்.
மனிதன் மற்றும் பெண் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் உள்ளன. ஒரு இல்லாமல், மற்ற இருக்க முடியாது. அவர்கள் ஒவ்வொரு துறையில் ஒருவருக்கொருவர் உதவி. எனவே கல்வி மனிதன் மற்றும் பெண் இருவருக்கும் வேண்டும். மேலும், பெண்கள், எதிர்கால தலைமுறை அம்மா. பெண்கள் படிக்காத என்றால், எதிர்கால தலைமுறைகள் படிக்காத இருக்கும். இந்த காரணத்திற்காக கிரேக்கம் வீரன் நெப்போலியன் முறை "எனக்கு ஒரு சில படித்த தாய்மார்கள் கொடு, நான் உனக்கு ஒரு வீர இனம் கொடுக்க வேண்டும்" என்றார்.
நாள் வாழ்க்கை நாளில், உண்மையான பிரச்சினைகள் பெண்கள் முதல் எதிர் பின்னர் அதே பிரச்சினைகள் தீர்வு ஆண்கள் வெளிப்படுத்தப்படுகிறது. பெண்கள் கல்வி என்றால், அவர்கள் வீடுகள் அனைத்து பிரச்சினைகளை தீர்க்க முடியும்
மிகவும் பொதுவாக, சில குடும்பங்கள் வேலை ஆண்கள் துரதிருஷ்டவசமான விபத்துக்கள் உள்ள ஊனமுற்றவர். அந்த சூழ்நிலையில், குடும்பத்தின் முழு சுமை குடும்பங்கள் பெண்கள் மீது உள்ளது. இந்த அவசர தேவை பெண்கள் கல்வி வேண்டும் சந்திக்க. அவர்கள் வெவ்வேறு கோளங்கள் வேலை. பெண்கள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பணியாற்ற முடியும். படித்த பெண்கள் நல்ல அம்மா.
பெண்கள் கல்வி போன்ற வரதட்சணை பிரச்சனை, வேலையின்மை பிரச்சினை போன்ற பல சமூக மோசமானது ஒழித்துக்கட்ட உதவியாக இருக்கும், பல சமூக அமைதி எளிதாக நிறுவப்பட்டது




தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி
Seal of Tamil Nadu.jpg
 பார் • உரை • தொகு 
143,பி.எஸ் குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் சாலை),சென்னை 28 இல் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்புறத் தோற்றம்
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 171997[1] ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]செயற்பாடுகள்

மாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் சிபிரிவு 12 ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. (தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.)
State-Human1logo.jpg
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பின்வரும் செயற் பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் புரிதல் வேண்டும்[1][2]
  • () தாமே முற்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டவரால் அல்லது நபர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் பேரில்;-
    • மனித உரிமைகளின் மீறுகைக்கான அல்லது அதில் தலையீட்டு குறைத்தலுக்கான; அல்லது
    • அரசு பணியாளர் ஒருவரால் அத்தகைய மீறுகையைத் தடுப்பதில் காணப்பட்ட கவனமற்ற தன்மைக்கான முறையீட்டினை விசாரித்தல் வேண்டும்.
  • () நீதிமன்றம் ஒன்றின் முன்னர் முடிவுறா நிலையிலுள்ள மனித உரிமை மீறலுக்கான குற்றச்சாட்டு எதனையும் உள்ளடக்கியுள்ள நடவடிக்கை எதிலும் மாநில மனித உரிமைகள் ஆணையர் அத்தகைய நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம்.
  • (அணுகுமுறைசீர்திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை அல்லது நிலையம் எதிலும் எங்கே நபர்கள் காவலில் வைக்கப்படுள்ளார்களோ அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களோ அங்கே இருக்கின்றவர்களின் வாழ்க்கை நிலையினை கவனமாக ஆராய்வதற்கும் அதில் பரிந்துரைகளை (சிபாரிசுகளை) செய்வதற்கும் மாநில அரசாங்கத்திற்கு தகவல் அளித்துவிட்டு மாநில மனித உரிமை ஆணையம் அதனைப் பார்வையிடலாம்.
  • () மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் மாநில மனித உரிமைகளின் பாதுகாப்பிற்காக வகை செய்யப்படுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அவற்றைத் திறம்படச் செயற்படுத்துதற்கான நடைமுறைகளைப் பரிந்துரை செய்யலாம்.
  • (வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) உள்ளடங்களாக மனித உரிமைகள் நுகரப்படுவதை தடுத்து நிறுத்துகின்ற விடயங்கள் மறு ஆய்வு செய்தல் மற்றும் தீர்வழிக்கான உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யலாம்.
  • (ஊ) மனித உரிமைகள் மீதான உடன்படிக்கைகள், பிற பன்னாட்டு முறையாவணங்களைக் கவனமாக ஆராயவும் அவை திறம்பட செயற்படுதலுக்குப் பரிந்துரை செய்யலாம்.
  • () மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
  • () மனித உரிமை மேம்பாட்டிற்குத் தேவையானதென்று கருதுகின்ற இன்னபிற பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் ஆற்றலாம்.

[தொகு]புகார்

[தொகு]புகார்கள் அனுப்புவது

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் [1][2]கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • புகார் மனுவுக்கு கட்டணம் கிடையாது.
  • புகாரில் முழுமையான விவரத்தை தெரிவித்தல் வேண்டும்.
  • ஆணையம் புகார் சம்பந்தமான கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறலாம். புகார்களை பிரமாணப் பத்திரம் (அபிடாவிட்) மூலம் அளிக்குமறு சொல்லலாம்.
  • தந்தி மற்றும் தொலை நகல் மூலம் அனுப்பும் புகார்களை சற்று எச்சரிக்கையுடன் ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.

[தொகு]புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை

  • புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-[3]
  1. .பெயர்
  2. .இருப்பிட முகவரி
  3. .புகார் எழுந்த நிகழ்விடம் மற்றும் முகவரி
  4. .நாள் மற்றும் நிகழ்வின் காலம்
  5. .மனித உரிமை மீறல்களின் விரிவான/சுறுக்கமான விவரங்கள்
  6. .எந்த பொது ஊழியர் குறித்து புகார் அல்லது துறையினர் குறித்து புகார்.
  7. .நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ளனவா/தீர்ப்பாயம்/வேறு பிற ஆணையங்களில் நிலுவையில் உள்ளனவா?
  8. .இடர்/ துயர்/பதிலீடு குறித்து வேண்டுவன

  • குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும்.

[தொகு]ஏற்கப்படாத புகார்கள்

கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.[1][2]
  • தெளிவற்ற புகார்.
  • தெளிவற்ற பெயர் இல்லாத புனைப் பெயரில் கொடுக்கப்பட்ட புகார்.
  • மிகச் சிறிய அளவிலான புகார்.
  • பொது ஊழியருக்கு எதிரானல்லாத குற்றச்சாட்டு.
  • சொத்துரிமைகள், ஒப்பந்த கடப்பாடுகள், உரிமையியல் சார்ந்த பிரச்சினைகள்.
  • பணி விடயங்கள் (சர்விஸ் மேட்டர்) சம்பந்தமானப் புகார்.
  • மனித உரிமைகள் மீறுதல் எதனையும் கொண்டிராத குற்றச்சாட்டுகள்.
  • தொழில் அல்லது தொழில் தகராறு சம்பந்தமானப் புகார்.
  • ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட புகார்.

[தொகு]புகார்களைப் பெறுதல்

  • புகார்களை ஆணையம் பெற்றபின் அவைகளை துறை வாரியாக பிரிக்க்ப்பட்டு அவைகளை நாட்குறிப்பில் பதிவு செய்தபின் அந்தந்த சட்டப்பிரிவுக்கு அனுப்ப படுகின்றது.[2]
  • [2]அவசரப் புகார்களை அந்த துறை சட்டப் பதிவாளரின் உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டபின், பதிவாளர் அதற்குத் தேவயான கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
  • புகார்கள் மற்றும் தகவல்கள் ஆங்கிலத்தில் இல்லாதபொழுது அவற்றை உடனடியாக மொழிபெயர்த்து ஆணையத்தின் முன் வைக்கப்படும். (தேசிய ஆணையத்தில் இம்முறை கையாளப்படுகின்றது) அவசரத்தன்மைக்கேற்ப புகார்கள் சுருக்கமான உரைகளாக ஆங்கிலத்தில் தயார் செய்யப்படுகின்றன (இதுவே போதுமானதாக கருதப்படுகின்ற நேரத்தில்).[2]

[தொகு]ஆய்வு

ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[2] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.

[தொகு]காலவரை

புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்[2] ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்[2] தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

[தொகு]அழைப்பாணை

  • புகார் மனுவில் கூற்ப்பட்டுள்ள நபருக்கு ஆணையம், அவர் குறித்து விசாரணை தேவையென்க் கருதினால் அவருக்கு அழைப்பாணைகள்[2](சம்மன்ஸ்) அனுப்பி ஆணையத்துக்கு வர ஆணையம் பணிக்கின்றது.
  • புகார்தாரர் அல்லது புகார் தாரரின் அதிகாரம் பெற்ற வேறொரு நபர் (வழக்குரைஞர் தான் என்பதில்லை யார் வேண்டுமானாலும் அதிகாரம்பெற்றவராக)ஆணையத்தில் முன்னிலையாதல் (ஆஜர்) வேண்டும்.

[தொகு]புலன் விசாரணை

ஆணையமானது தனது 14 வது பிரிவின்[2] சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளவறு அதனுடைய புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு மாநில அரசின் புலனாய்வுக்கு உத்தரவிடும். இதன்படி அமைக்கப்பட் குழுவினர் ஆணையத்திற்காக புலனாய்வை மேற்கொண்டு அதன் அறிக்கையை ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பர். குறிப்பிட்ட காலவரைக்குள் புலனாய்வை முடிக்கவில்லையெனில் மேற்கொண்டு முடிவுகளுக்காக காரணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்கவேண்டும்.

[தொகு]மனித உரிமை நீதிமன்றங்கள்

[2] மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருத்து எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணை செய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுட்ன சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின்படி அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றங்கள்இவ்வழக்குகளை விசாரணை செய்யும். சிறப்பு மனித உரிமையியல் நீதிமன்றங்கள் என இந்நீதிமன்றங்கள் அழைக்கப்படும். சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் அரசின் சார்பில் இவ்வழக்குகளை மேற்க்கொள்வார்.

[தொகு]மாநில மனித உரிமை ஆணைய நியமனங்கள்

பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ளதின்படி அரசு ஆணை 1465 1466 பொதுமக்கள் (ச&ஒ) துறை, நாள் 20.12.1996[1] இல் கட்டமைக்கப்பெற்ற மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்-; மாநில மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
'
'

[தொகு]பெண்கள் உரிமை

இந்திய அரசியலமைப்பு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகளுக்கும் உத்திரவாதம் அளித்துள்ளது. (இந்திய அரசியலமைப்பின் விதிகள் 14, 15, 16) இது தவிர அரசாங்கமும் பெண்கள் நலனுக்கான பல சமூகநலச் சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.
ஒவ்வொரு வருடம் மார்ச் 8 அன்று பன்னாட்டு மகளிர் தினமாக கொண்டாடப் படுகின்றது.
பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்-;[4]
  • 1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
  • 3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
  • 6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
  • 7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

[தொகு]பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்

பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு பெண்களுக்கான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது.
பெண்களுக்கான தொழிலாளர் சட்டங்கள்[4]
  • 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம்
  • 1951 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம்
  • 1952 ஆம் ஆண்டு சுரங்கத் தொழிலாளர் சட்டம்
போன்ற சட்டங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • 1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

[தொகு]குழந்தைகள் உரிமை

குழந்தைகளை நலனே நாட்டின், சமுதாயத்தின் நலனாகும். இந்தியக் குழந்தைகள் கீழ்க்கண்ட உரிமைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்-;
குழந்தைகள் உரிமை[5]
  • மனித கண்ணியத்துடன் வாழும் உரிமை.
  • பெற்றோரின் பராமரிப்பில் வாழும் உரிமை.
  • இனம், நிறம், பால், தேசியம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடில்லாமல் வாழும் இயல்பான உரிமை.
  • ஆரோக்கியமான முறையில் வளர வசதிகளையும், வாய்ப்புகளையும் பெறும் உரிமை.
  • ஆளுமையை வளர்க்கக் கல்வி பயிலும் உரிமை.
  • சுதந்திரமாக கருத்துக்களைச் சொல்லும் உரிமை.
  • தேசியத்தைப் பெறும் உரிமை.
  • சுரண்டலிலிருந்தும், உடல், மனரீதியான கொடுமைகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக உள்ள உரிமை.

[தொகு]குழந்தைகள் சட்டம்

1960 இல் இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது, 1974 இல் இந்திய அரசு குழந்தைகளிக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது.குழந்தைகள் இளம் வயதில் குற்றங்கள் செய்வதை தடுத்து அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றியது.
குழந்தைகள் சட்டம் வலியுறுத்துவன-;
  • குழந்தைப் பிறந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையின் பிறப்பை பதிவு செய்யவேண்டும்.
  • பெயரிட்டபிறகு குழந்தையானது நல்ல குடிமகனாக வளர முறையான பாரமரிப்பு கட்டாயமாகின்றது.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் முறையானக் கல்வியும் எத்ர்காலத்தில் வேலைவாய்ப்புகளும் அளிக்கப்படவேண்டும்.

[தொகு]குழந்தைத் தொழிலாளர்கள் நிலை

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை என்பது உலகாளாவியப் பிரச்சினையாகும். 14 வயதுக்குட்பட்டவர்களை யாவரும் குழந்தைகள். 14 வயத்க்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் தொழிற்சாலைகளில் பணியில் நியமிக்கக் கூடாது என்று அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும் இந்திய அளவிலும் உலகளவிலும் இன்றளவும் குழந்தைகள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர் நிதர்சனமான உண்மை.
உலகளவில் பல இலட்சம் குழந்தைகளின் கரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகள், மோட்டார் பணிமனைகள், சுரங்கத் தொழில்கள், விசைத்தறிப் பட்டறைகள், உணவு விடுதிகள்செங்கற் சூலைகள்பட்டாசுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஏழ்மைகல்லாமை, சூழ்நிலைகள், மனக்குழப்பங்கள் ஆகியவை குழந்தைகளைத் தொழிலாளர் என்ற நிலைக்கு தள்ளுவதற்கு வழி செய்கின்றன.

[தொகு]குழந்தை தொழிலாளர்கள்

பெற்றோர்களின் சமூகப் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் கைவிடப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 75 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 103 கோடி இந்திய மக்களில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 18.55 கோடி பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்கள்[5]
  • திருப்பூர் ஆடைத் தொழிற்சாலையில் 25000 குழந்தைகள் வேலையில் உள்ளனர்.
  • சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலையில் உள்ளனர்.
  • விசைத்தறிப் பட்டறைகளில் 42 சதவீத குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.
  • வாரணாசிஜெய்ப்பூர்,அலகாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வைரத் தொழிற்சாலைகளில் 2 லட்சம் குழந்தைகள் பணிபுரிகின்றனர்.

[தொகு]ஐ.நா வின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு

ஐ.நா வின் துணை அமைப்பான உலகத் தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம்[5] ஆகிய அமைப்புகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

[தொகு]மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்

[தொகு]காவல்துறைக்கெதிரான குற்றச்சாட்டுகள்

மனிதவுரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக கூறப்படும் துறைகளில் காவல் துறையும் ஒன்று. அவற்றுக்கெதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள்-;[6]
  • (1). சித்ரவதை
  • (2). சட்டத்திற்கு புறம்பாக சிறை வைத்தல்.
  • (3). பொய் வழக்கு புனைதல்
  • (4). பாலியியல் கொடுமை
  • (5). வழக்குகளைப் பதிய மறுத்தல்
  • (6). எதிர் தாக்கு இறப்புக்கள் (என்கவுன்டர்ட் டெத்)
சிறைத்துறையினர் மீதும் குற்றசாட்டுகளாக சரியாக உண்வு கொடுக்காதது, பிணைக் கைதிகள் மரணம் (லாக் அப் டெத்), சரியான மருத்துவ சிகிச்சை தராதது போன்ற மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
காவல்துறையினர் மீது கூறப்படும் பெரும்பான்மையான புகார்கள் அவர்கள் கொடுமையாக நடந்து கொள்வதைப் பற்றியும் கடுஞ்சொற்கள், வசை மொழிகள் உபயோகிப்பது பற்றியுமே மக்களால் எழுப்பப்படுகின்றன.
அரசு துறைகளில் ஒப்பிடும் பொழுது காவல் துறையோடு பொதுமக்களுக்கு 10 சதமீதம் மட்டுமே தொடர்பு ஏற்படுகின்றது. ஆனால் அவற்றுக்கெதிராக (காவல்துறைக்கு) எழும் புகார்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது[6]
என்று முன்னாள் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான திரு.கே. நடராஜ் இ.கா.ப (ஏ.டி.ஜி.பி)[6] குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தமிழக சிறைத்துறை இயக்குநாராக பொறுப்பு வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு]பிரதான பாதுகாவலர்

முன்னாள் தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர்
:
 உண்மையில் மனிதவுரிமைகளின் பிரதான பாதுகாவலர் காவல்துறை எனலாம். சில களப் பணியாளர்களின் தவறான நடவடிக்கையால் காவல்துறை மனிதவுரிமை மீறல் புகாருக்கு உள்ளாகின்றது. பெரும்பாலன காவல்துறையினர் அதிகாரத் தோரணையோடு பணிபுரிந்தால்தான் மக்கள் மதிப்பர் என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர். இதனால் காவல்துறையினர் என்றாலே கடுப்புத் துறையினர்; சீறுடையணிந்த சண்டைக்காரர்; கெட்ட வார்த்தைகள் சரளமாக பேசுபவர்; அநாகரிகமான சடை உடை பாவணை உடையவர்; வழக்கு என்ற பேரில் கொடுமை படுத்துபவர்; ஊழலில் உழலுபவர் என்ற எண்ணம் மேலோங்குகின்றது.
-திரு கே நடராஜன் இ.கா.ப
முன்னாள் மாநில மனிதவுரிமை
ஆணைய உறுப்பினர்[6]

[தொகு]இந்திய அரசியலமைப்பில் மனிதவுரிமைகள்

இந்திய அரசியலமைப்பின் 3 வது பிரிவில் கூறப்பட்டுள்ளவை-;[4]
  • 1. சமத்துவ உரிமை
  • 2. சுதந்திர உரிமை
     :
     சுதந்திர உரிமையில் உள்ளடக்கியவகளாக-;
    • 2.1. பேச்சுரிமை
    • 2.2. எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை
    • 2.3. ஒன்று படும் உரிமை.
    • 2.4. சங்கங்கள் அமைக்கும் உரிமை.
    • 2.5. நடமாடும் உரிமை.
    • 2.6. குடியேறி வசிக்கும் உரிமை
    • 2.7. பணி செய்யும் உரிமை.
  • 3. சுரண்டலுக்கெதிரான உரிமை
  • 4. சமய சுதந்திர உரிமைகள்
  • 5. கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள்.
  • 6. சொத்துரிமை.
  • 7.அரசியலமைப்பிற்குட்பட்டு பரிகாரம் பெறும் உரிமை.

[தொகு]மனித உரிமைகள் பற்றி அறிஞர்கள் கருத்து

பொசாங்கே என்ற அறிஞரின் கூற்றுப்படி[4]:
 சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் செயல்படுத்தப்படும் கோரிக்கைகளே உரிமைகள் எனப்படுகிறது.
எர்னஸ்ட் பார்க்கரின் கருத்துப்படி[4] :
 அரசால் உத்திரவாதம் அளிக்கப்பட்டவையே உரிமைகள் ஆகும்.
முன்னாள் மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர்[6]
:
 ஒவ்வோரு கோப்பின் பின்னாலும் ஒருவரின் பிரச்சனை பிணைந்திருப்பதை உணர வேண்டும். ஏழை மக்களின் வலி புரிய வேண்டும். நம்மை அவர்களின் நிலையில் நிறுத்தி பார்த்தோமானால் நமது செய்கைகள் பரிமளிக்கும்.
முன்னாள் தமிழ்நாடு மாநில மனிதவுரிமை
ஆணைய உறுப்பினர்
திரு.கே. நடராஜ். இ.கா.ப

[தொகு]மாநில மனித உரிமை ஆணையத்தால் பயனடைந்தோர்

2003-2004 இல் மாநில அரசு ஆணையத்திற்காக செலவிடப்பட்டத் தொகை 224.72 இலட்சம். அந்த ஆண்டில் பயனடைந்தோர் எண்ணிக்கை 1772 பேர்.[4]

[தொகு]ஐ.நா வின் மனித உரிமை விதிகள்

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இம்மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் இதை ஏற்படுத்தும் பொறுப்பு ஐ.நா அவைக்கு ஏற்பட்டது. 1945 இல்டிசம்பர் 24 இல் ஐ.நா அவை ஏற்பட்டவுடன் அமைக்கப்பட்ட குழுவின் முன் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அக்குழுவினரால் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட விதிகள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், பன்னாடுகளுக்கும் பொருந்துவனவாகவும் அமைந்திருந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர் 24 அன்று ஐ.நா தினமாக ஐ.நா உருவான நாளை அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு ஐ.நா வினால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மனித உரிமைகள் டிசம்பர் 10 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தினத்தையே
ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று மனித உரிமைகள் தினமாக அனைத்து நாடுகளாலும் கொண்டாடப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று 30 விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டது அதில் சில முக்கிய விதிகள்-;[4]
  • 1. அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும் சம அந்தஸ்துடனும், சமவுரிமை பெற்றுள்ளனர்.
  • 2. ஒவ்வொருவருக்கும் வாழ்வியல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு பெற உரிமை உண்டு.
  • 3. எவரையும் அடிமைப் படுத்துதல் கூடாது.
  • 4. சட்டத்தின் முன் அனைவரும் சமம், வேறுபாடின்றி அனைவருக்கும் சட்டப்பாதுகாப்பு அளிக்கப்படும்.
  • 5. எவரையும் காரணமின்றி கைது செய்யவோ, சிறையில் வைக்கவோ, நாடு கடத்தவோ கூடாது.
  • 6. அவரவர் நாட்டு எல்லைக்குள் நடமாடவும் வசிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
  • 8. திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் ஈடுபடும் உரிமை.
  • 10. சிந்திக்கும் உரிமை, செயல்படும் உரிமை மற்றும் வழிபாட்டுரிமை.
  • 11. கருத்து தெரிவிக்கவும், எண்ணங்களை வெளியிடவும் உரிமை.
  • 12. அமைதியான முறையில் கூட்டம் கூட்டவும், சங்கம் அமைக்கவும் உரிமை.
  • 13. அவரவர் நாட்டு அரசாங்கத்தில் பங்கெடுக்கும் உரிமை.
  • 14. வேலை செய்வதற்கான உரிமை.
  • 15. வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை.
  • 16. எல்லாக் குழந்தைகளுக்கும் சமூகப் பாதுகாப்பு பெறும் உரிமை.

[தொகு]இவற்றையும் பார்க்கவும்

[தொகு]வெளி இணைப்புக்கள்

[தொகு]மேற்கோள்கள்

  1. ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 மனித உரிமை ஆணையம்- ஆணையத்தைப் பற்றி பார்த்து பரணிடப்பட்ட நாள் 17-04-2009
  2. ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 வேங்கடாசலம், புலமை (செப்டம்பர்,2007). மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகள். சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98: தாமரை பப்லிக்கேசன் பி லிட்,. pp. xii+100=112. ISBN 81-88049-78-6.
  3.  மகராஷ்டிரா மாநில மனித உரிமை ஆணையம்-புகார் குறித்து மனு செய்ய பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009
  4. ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 தமிழ்நாட்டுப் பாடநூல் வரிசை வகுப்பு 8-சமூக அறிவியல்- வரலாறு மனித உரிமைகள்- பெண்கள் உரிமைகள்-பகுதி 6 பி டி எப் பார்த்து பரணிடப்பட்ட நாள் 03-05-2009.
  5. ↑ 5.0 5.1 5.2 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பாடநூல் வரிசை 7 ஆம் வகுப்பு-பாடம் 6-பக்கம் 137-மனித உரிமை மற்றும் குழந்தைகள் உரிமை-இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-05-2009
  6. ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 தமிழ்நாடு மாநில மனிதவுரிமை ஆணையம்- ஏ.டி.ஜி.பி உரை-நாளிதழ்-.பி.டி.எப் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-05-2009