முகநூலில் நண்பரின் பதிவு இது நன்றி நண்பரே
தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் இந்தியாவில் விடுமுறை இனிதே நிறைவு பெற்றது , காலத்தின் மாற்றம் கலாச்சாரத்தின் அசுரமாற்றம் என்று இந்த முறை கொஞ்சம் அதிகமாக மிரட்டபட்டுள்ளேன் என்பதே நிதர்சனமான உண்மை.
அனுபவங்கள் அனைத்தையும் ஒவ்வொரு சம்பவமாக பகிர ஆசைபடுகிறேன் விருப்பம் இருப்பின் தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி ...
சம்பவம் 1.
"கைப்பேசி அலைக்கற்றையில் கரைந்த தாய்மை"
இடம் : ஆண்டாள் வீதி திருச்சி
நாள் : பரபரப்பில்லாத விடுமுறை நாள்
நேரம் : அவசரம் இல்லாத மாலை நேரம்
ஆண்டாள் வீதி ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஒரு தேநீர் கடையில் நின்று தேநீர் அருந்திக்கொண்டு இருந்தேன் அவ்வழியே நடந்து செல்பவர்களை கவனித்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது அந்த பாதசாரிகள் கூட்டத்தின் நடுவே 55 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார் மேனி வியர்க்க கையில் 1 .1/2 வயது குழந்தையுடன் சோர்ந்த முகத்துடன் மிகவும் களைப்புடன் கடந்து சென்று கொண்டு இருந்தார்.
அந்த குழந்தையை சுமக்கும் அளவு தெம்பு அவர் உடலில் இல்லை என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது , இருப்பினும் அந்த குழந்தையின் மேல் அவர் வைத்திருக்கும் பாசமும் குலுங்கி தள்ளாடி நடக்கும் பட்டியை பார்த்து சிரித்துகொன்டே பயணிக்கும் அந்த குழந்தையின் சிரிப்பும் அந்த சாலையை கடக்க அவருக்கு அவருள் ஒரு இனம் புரியாத உத்வேகத்தை தந்துகொண்டிருந்தது.
சற்றே அந்த அம்மையாரின் நிலை புரிந்தது , குழந்தையை பனிக்காலத்தில் வெளியே கொண்டுவருபவர்களிடம் இருக்கவேண்டிய இருக்ககூடிய எந்த பொருட்களும் அவரிடம் காணப்படவில்லை .
கண்கள் அக்குழந்தையின் தாய் மிகஅருகில் இருக்ககூடும் என்ற நம்பிகையுடன் தேடத்தொடங்கியது , குழந்தையின் முன்னே சரியாக 30 அடி இடைவெளியில் 24 -25 மதிக்க தக்க ஒரு இளம் தாய் கண்ணில் தென்பட்டார்.
தோளில் அவர் உடைக்கு ஏற்றாற்போல் ஒரு சிறிய அழகிய கைபை அதில் அந்த குழந்தைக்கு வேண்டிய பொருட்கள் இருக்குமா என்பது அவருக்குமட்டுமே வெளிச்சம் .
கையில் கைப்பேசி இணைப்பில் யாரோ இருக்க அன்ன நடை போட்டு கடந்து சென்றார்
"நீ பெற்ற குழந்தையை சுமக்க உனக்கு என்ன சிரமம்
உன்னை சுமந்து உன்மேல் வைத்த பாசத்திற்காக
உன் குழந்தையையும் உன் தாய்தான் சுமக்க வேண்டுமா?..."
இதை படிக்கும் சகோதரிகளே சிந்திப்பீர்
நன்றி
இவன்
பிரின்ஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக