ஆண் பெண் நட்பு நீடிக்க
ஆண் பெண் நட்பு என்பது சகஜமாகிவிட்ட இந்த காலத்தில் கூட ஒரு சில அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை. பொதுவாக தோழியை கைபேசியில் அழைக்கும் போது அவருக்கு எந்த நேரம் பேச வசதிப்படும் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். பேசுவதற்கு வசதிப்படுமா என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புவது நலம். போன் நம்பரை தர சொல்லி தொல்லை செய்ய வேண்டாம் . எல்லார் வீடுகளிலும் அதற்கான சூழல் இருக்காது. திருமணம் ஆன தோழியாக இருந்தால் இன்னும் கவனம் தேவை. உங்களுடைய அழைப்பை யார் ஏற்றாலும் அவரிடம் பேசுவது யார் என்று சொல்லி இன்னாருடன் பேச வேண்டும் என்று கேளுங்கள். வேறு யாரவது அழைப்பை ஏற்கும் போது தயவு செய்து அழைப்பை துண்டிதுவிடாதீர்கள். அதை விட அந்த பெண்ணுக்கு வேறு தொல்லையே வேண்டாம். என் குரலை கேட்டதும் ஏன் பேசவில்லை என்று குடும்பத்தினரின் கேள்விகளை சந்திக்க முடிவதில்லை. தோழிகளின் குடும்பத்தினரோடு நல்ல உறவை ஏற்படுத்தி கொள்ளுங்கள். chat இல் பேசும்போதும் எடுத்தவுடன் உங்கள் அன்பை எல்லாம் கொட்டாதீர்கள். ஒரு வணக்கத்துடன் ஆரம்பியுங்கள். யாரேனும் அருகில் இருந்தால் அவரே தெரியபடுத்தி விடுவார். தவறான வார்த்தைகளால் ஆரம்பித்தால் பல சமயங்களில் தர்ம சங்கடமாகி விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக