புதன், 15 ஜனவரி, 2014

முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணை.




இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயன். வறட்சியின் பிடியால் வாழும் தென் தமிழகத்திற்கு அணை கட்டும் பணிக்காக மதுரைக்கு மாற்றலாகி பொறுப்பேற்று 1874ல் அணை கட்டத் தொடங்கினார். 

முல்லைப் பெரியாறு அணை.

பல தடைகள் : யாருக்காக அணை கட்டத் தொடங்கினாரோ அந்த மக்களே அணைக்காகக் கொண்டு வரப்பட்ட பொருட்களைத் திருடிய கொடுமையும், அதனால், பட்ஜெட் பிரச்சினையாகி, திட்டமிட்டபடி கட்ட முடியாததால் அணைகட்டும் திட்டத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். எனினும், திட்டத்தைக் கைவிட்டு விடக் கூடாது என்று மீண்டும் சிபாரிசின் மூலம் திரும்பி வந்தார். பற்றாக்குறை பணத்தை தன் சொத்துகளை விற்று சரி கட்டினார்.

எல்லாவற்றினும் கொடுமையான விசயம், கட்டுமானத்தின் போது ஏற்பட்ட விபத்தில் தன் மகளைப் பறிகொடுத்தார்.

இத்தனையும் மீறி வெற்றிகரமாகக் கட்டி முடித்த அணையை வைத்துக் கொண்டு கட்டி உருண்டு கொண்டிருக்கிறோம் இரு மாநிலத்தார்களும்.

கர்னல் பென்னி குயிக்கின் 173ம் ஆண்டு பிறந்த தினம் இன்று!

நமக்கு அது முக்கியம் இல்லை.... இந்த அணையை வைத்து எப்படி அரசியல் பண்ணலாம் என்பது தான் முக்கியம்


வாடிப்பட்டி அருகே அவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக