எழுத்தாளர்களின் கொடைவிழாவான சென்னை புத்தகக்கண்காட்சி இன்று கோலகலமாகத் துவங்குகிறது. வாழ்த்துகள்! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வாசகர்களின் எண்ணிக்கை கூடவும், புத்தகவிற்பனை பெருகவும் வாழ்த்துகள்!
தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்கள் வெளிவந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் உட்பட. ஆனால் எத்தனை பதிப்பகங்கள் தாங்கள் பதிப்பிக்கும் புத்தகத்தின் படைப்பாளியிடம் காப்புரிமை ஒப்பந்தம் போடுகிறார்கள்? எத்தனை பதிப்பகங்கள் எழுத்தாளர்களுக்கு உரிய காப்புரிமைத் தொகையை அளிக்கிறார்கள்? இதைப்பற்றி பாபாசி என்கிற பதிப்பக அமைப்பு ஏதாவது கவனம் செலுத்தியிருக்கிறதா? எழுத்தாளர்கள் தங்கள் காப்புரிமை பற்றி உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்களா?
படைப்பாளிகளும் பதிப்பகங்களும் கவனம் கொள்ள வேண்டும். எழுத்தாளர்களைக் கொண்டாடாமல் அல்லது கொண்டாடத்தெரியாமல் தான் பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்தாளர்கள் இரந்துண்டு வாழ்வது நம் சமூகத்துக்கு இழுக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக